துப்பாக்கியை பிடிங்க விஜய்.. பவன் கல்யாணால் அதிகாலையே விஜய்க்கு வந்த குட் நியூஸ்.. நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தான் நடிக்கும் ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று அறிவித்து உள்ளார். தற்போது முழு நேர அரசியலிலும் இறங்கி உள்ளார். ஆனால் அவர் அரசியல் ரீதியாக வெற்றிபெறுவாரா என்ற கேள்வி நிலவி வருகிறது.

ஜனநாயகன் படத்திற்கு பின் வேறு படங்களில் நடிக்க மாட்டேன். தொடர்ந்து அரசியலில் நீடிப்பேன் என்று விஜய் கூறி வருகிறார். அதற்கு ஏற்றபடியே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இரண்டு மாநாடுகளை நடத்தி முடித்துவிட்டார். தற்போது மக்களை சந்திக்க சாலை பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

vijay tvk tamilaga vetri kazhagam

அரசியலில் விஜய் தீவிரம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் டிசம்பர் 20 வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், தற்போது பிப்ரவரி 21 வரை தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நீட்டிக்கப்பட்ட பயணத்தின்போது, அவர் 18 சனிக்கிழமைகளிலும், 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த புதிய கால அட்டவணை, விஜயின் மக்கள் தொடர்பு முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதை கேட்கும் விஜய்

ஆனால் அரசியலில் தீவிரமாக இருந்தாலும்.. அடுத்த 2026 தேர்தலில் வெல்லவில்லை என்றால் விஜய்க்கு சிக்கலாகும். ஏனென்றால் முதல்வராகவும் இல்லாமல், சினிமாவிலும் இல்லாமல் போனால் விஜய்க்கு மவுசு குறையும். எதிர்க்கட்சியாக அவர் சமாளிப்பது கடினம். விஜயை திரையில் பார்க்காமல்.. 5 வருடம் ரசிகர்களும் ஏமாற்றம் அடைவார்கள். விஜய் முதல்வராக ஆக முடியாத பட்சத்தில் அவர் சினிமாவிற்கு திரும்புவதே சரியாக இருக்கும்.

நடிகர் விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அடுத்த படத்திற்கான கதையையும் கேட்க தொடங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.

அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த சில படங்கள் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விஜய்க்கு குட் நியூஸ்

இப்படிப்பட்ட நிலையில்தான் பவன் கல்யாண் நடித்து வெளியான OG படம் இன்று வெளியானது. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பவன் கல்யாண் நடித்த கடைசி இரண்டு படங்கள் சரியாக போகாத நிலையில், இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதிகாலை முதல் படத்திற்கு நல்ல ரிவ்யூக்கள் வர தொடங்கி உள்ளன.

அரசியலுக்கு போனாலும் சினிமா கிரேஸ் குறையாது என்பதை பவன் கல்யாண் நிரூபித்து உள்ளார். சினிமாவில் தொடர்ந்து சாதிக்க முடியும் என்பதை பவன் கல்யாண் நிரூபித்து உள்ளார். இதுதான் விஜய்க்கு சாதகமாக வந்துள்ளது.

அரசியலில் ஒருவேளை நினைத்தது நடக்கவில்லை என்றால் மீண்டும் சினிமாவிற்கு வரும் சான்ஸ் விஜய்க்கு இதன் மூலம் பிரகாசமாக இருக்கிறது. இந்த் நிலையில்தான் நடிகர் விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அடுத்த படத்திற்கான கதையையும் கேட்க தொடங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அரசியலில் வெல்ல முடியவில்லை என்றால்.. துப்பாக்கியை பிடிங்க விஜய் என்று மீண்டும் அவரிடம் துப்பாக்கியை கொடுத்து நடிக்கத்தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+