பசங்களா லக்குதாம்ப்பா! செப்டம்பர் மாதம் இத்தனை நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா?.. என்ஜாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு நிறைய நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு கல்வியாண்டும் பிறந்ததும் மாணவர்கள் சின்சியராக பார்க்கும் விஷயம் இந்த ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும், எந்த பண்டிகையாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறதா, புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவை பள்ளி விடுமுறை நாட்களில் வருகிறதா என பார்ப்பர்.

how many Holidays for school kid in september?

இவர்களை விட பெற்றோரும் அந்த தகவல்களை பார்த்து பரவசமடைவர். அன்றாவது ஒரு நாள் சாப்பாடு கட்டும் வேலை, பிள்ளைகளை அழைத்து வரும் வேலை இல்லாமல் சற்று ஓய்வெடுக்கலாம் என்பதால்தான்.

அந்த வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதியும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்குகிறது.

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையாகும்.

அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும் சனிக்கிழமைகளில் வருகிறது. இதன் அடிப்படையில்தான் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 நாட்களுக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும் விடுமுறை கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+