Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்வளவுதான் பொறுமை காப்பது? இருதயக்கூடு எரிகிறது! ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சித்த வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: துர்தர்ஷன் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இந்தி மாத கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ‛‛ இருதயக்கூடு எரிகிறது.. எவ்வளவு தான்பொறுமை காப்பது? தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் தமிழர்கள் இறங்குவார்கள்’’ என்று காட்டமாக கூறியுள்ளார்.

சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தமிழகத்தை பொறுத்தவரை இந்திக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

doordarshan rn ravi vairamuthu

தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடத்தி முடிக்கப்பட்டது.

இதில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் "தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் மிஸ்ஸானது. அதாவது தமிழ்தாய் வாழ்த்து பாடியவர்கள் அந்த வரியை விட்டுவிட்டு பாடினர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆளுநர் நிகழ்ச்சியில் 'திராவிட நல் திருநாடும்’ மிஸ்.. சண்டை செய்த முதல்வர் ஸ்டாலின்..பாஜக விளக்கம்..!


இதனை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் டிடி அலுவலகம் அருகே இன்று திடீர் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்தனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் திராவிடத்தை சிறுமைப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதையடுத்து ஆளுநர் மாளிகை அறிவுறுத்தலின்பேரில் டிடி தொலைக்காட்சி வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டிடி தொலைக்காட்சி சார்பில்,”தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள், ஹிந்தி மாத நிறைவுத் திருவிழா மற்றும் தூர்தர்ஷன் சென்னையின் தங்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும் போது, கவனச்சிதறலால் தவறுதலாக ஒரு வரி விடுபட்டது. இந்த தவறிற்கு எங்களது மன்னிப்பை கோருகிறோம். தமிழ்த் தாய் வாழ்த்தை பாடிய பாடகர்களுக்கு தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்பதை குறிப்பிடுகிறோம். இதனால் தமிழ்நாடு ஆளுநருக்கு ஏற்படுத்திய அசவுகரியத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.” என கூறப்பட்டு உள்ளது.

தப்பு தப்பாக தமிழ்த் தாய் வாழ்த்து.. தவறிய திராவிட நல் திருநாடு! வெகுண்டெழுந்த தமிழகம்.. பணிந்த டிடி


ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் துர்தர்ஷன் பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக பாடலாசிரியர் வைரமுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனக்கே உரித்தான கவிதை நடையில் அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழையும்
தமிழ் நாட்டையும்
திராவிடக் கருத்தியலையும்
எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்
பல நிகழ்வுகளைக் கண்டும்
காணாமல் போயிருக்கிறோம்

ஆனால்,
தமிழ்த்தாய் வாழ்த்தில்
"தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்"
என்ற உயிர் வாக்கியத்தைத்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து
தவிர்த்ததைக்
காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்
கடந்துபோக மாட்டார்கள்

இருதயக் கூடு எரிகிறது

எவ்வளவுதான்
பொறுமை காப்பது?

இந்தச் செயலுக்குக்
காரணமானவர்கள்
யாராக இருந்தாலும்
தமிழர்கள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார்கள்

"திராவிட" என்ற
சொல்லை நீக்கிவிட்டு
தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?

தமிழ்த்தாய் வாழ்த்தில்
தவிர்ப்பதற்கு மட்டும்
யார் தைரியம் கொடுத்தது?

திராவிடம் என்பது நாடல்ல;
இந்தியாவின்
ஆதி நாகரிகத்தின் குறியீடு

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
இதுபோன்ற இழிவுகள்
தொடர்ந்தால்
மானமுள்ள தமிழர்கள்
தெருவில் இறங்குவார்கள்;
தீமைக்குத் தீயிடுவார்கள்

மறக்க வேண்டாம்

தாய்மொழி காக்கத் தங்கள்
உடலுக்கும் உயிருக்குமே
தீவைத்துக் கொண்டவர்கள்
தமிழர்கள்

அந்த நெருப்பின் மிச்சம்
இன்னும் இருக்கிறது எங்களிடம்’’ என StopHindiImposition, திராவிடநல்திருநாடு என்ற ஹேஷ்டேக்குகளில் பதிவிட்டு ஆளுநர் ஆர்என் ரவியின் பெயரை கூறாமல் கோபத்தை கொப்பளித்துள்ளார் வைரமுத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+