கோடிகளை கொட்டிய தமிழகம்.. 33 நாளில் தேர்தல் ஆணையம் அள்ளிய பணம், நகை எவ்வளவு தெரியுமா? தலைசுற்றுதே
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் இன்று வரை வெறும் 33 நாட்களில் தமிழ்நாட்டில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம், தங்க நகைகள், பரிசு பொருட்களை பறக்கும் படை பறிமுதல் செய்துள்ள நிலையில் அதன் மொத்த மதிப்பு குறித்த விபரத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் நடந்தது. 2019ல் தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் மீண்டும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 19ம் தேதி முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜுன் 1 என்று 7 கட்டங்களாக நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட மொத்தம் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 16ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுவிட்டன. உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொகுதி வாரியாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை கடந்த 33 நாட்களில் மட்டும் தமிழகத்தில் பணம், நகைகள், பரிசு பொருட்கள் என ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது முதல் ரூ.1,219 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பணம், தங்க நகைகள், பரிசு பொருட்கள், போதைப்பொருட்கள் அடங்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications