"ரூ.40,000 சம்பாதிச்சு! என்ன பண்ணுவ! எதுக்கு கல்யாணம்!" ஆனந்த் சீனிவாசன் சொல்ல.. கதறும் நெட்டிசன்கள்
சென்னை: மிடில் கிளாஸ் மக்களுக்கான சேமிப்பு டிப்ஸ்களை அளித்த தரும் ஆனந்த் சீனிவாசன், இன்றைய காலகட்டத்தில் குடும்பம் நடத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து எளிமையாக விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனை இந்த இணைய உலகில் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரியும். மிடில் கிளாஸ் மக்களும் எப்படிச் சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறார்.

அதிலும் குறிப்பாகச் சென்னையில் 40 ஆயிரம் சம்பாதிக்காமல் எதற்குக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர் அதிரடியாகப் பேசிய வீடியோ, இன்றைக்கும் இணையத்தில் அவ்வப்போது டிரெண்டாகும்.
ஆனந்த் சீனிவாசன்: இதனிடையே விலைவாசி எல்லாம் தொடர்ந்து ஏறி வரும் நிலையில், இப்போது எவ்வளவு சம்பளம் வாங்கினால் திருமணம் செய்ய வேண்டும் என்று நெறியாளர் கேட்க அதற்கு பக்காவான விளக்கத்தை ஆனந்த் சீனிவாசன் தந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "சென்னையில் இருக்கத் தான் 40 ஆயிரம் தேவை என நான் கூறியிருந்தேன். சென்னை தவிர்த்து திருச்சி மதுரை போன்ற இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்தால் அதற்கான கணக்கே வேறு.
இப்போதைய காலகட்டத்தில் சென்னையில் பெரிதாக வாடகைக் கட்டணம் ஏறவில்லை. ரியல் எஸ்டேட் மதிப்பு ஏறாத காரணத்தால், வாடகை பெரிதாக ஏறவில்லை. அதேநேரம் அதைத் தவிர அனைத்து செலவுகளும் ஏறிவிட்டது. குறிப்பாக பெட்ரோல், முட்டை, மட்டன், பால், பருப்பு என அனைத்து விலையும் ஏறியுள்ளது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.
இருவரும் உழைக்க வேண்டும்: முதலில் சென்னையில் இருந்தால் கணவன் மனைவி இருவரும் வேலை செய்ய வேண்டும். இந்தியாவில் இது ஒரு பெரிய பிரச்சினையாகவே உள்ளது. இங்கே உழைக்கும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். பெண்கள் வீட்டில் இருப்பது குடும்பத்திற்கு வேண்டுமானாலும் நல்லதாக இருக்கலாம்..ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதே இல்லை. இதனால் சிட்டியில் இருந்தால் ஆண்- பெண் என இருவரும் வேலை செய்ய வேண்டும்.
இப்போது இணையம் மூலமே வேலை செய்யும் வசதியும் வந்துவிட்டதால் குறைந்தது பார்ட் டைமில் ஆவது வேலை செய்ய வேண்டும். அவர்கள் சம்பாதிக்கும் சிறு தொகையும் பெரியளவில் உதவும். ஏனென்றால் சென்னையில் வாடகை, ஆள் சம்பளம் என எல்லாமே அதிகம். இதனால் இங்கே விலைவாசி அதிகமாக இருக்கும். எனவே, இருவரும் நிச்சயம் வேலைக்குச் செல்ல வேண்டும்.

செலவுகள்: 4 ஆண்டுகளில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. அன்று பெட்ரோல் 70 ரூபாய்.. இன்று 102 ரூபாய்.. அன்று சிலிண்டர் 600 ரூபாய், இன்று 1150 ரூபாய். மின்சார விலை உயர்ந்துள்ளது. இதெல்லாம் அத்தியாவசிய தேவை. இதில்லாமல் குடும்பம் நடத்த முடியாது. ஆபீசுக்கு அருகே வீடு பார்த்தால் வாடகை அதிகம்.. போரூர் போன்ற ஏரியாவில் 2 பெட்ரூம் வீடு வாடகை 14 ஆயிரம் ஆகிவிடும். தள்ளிப் பார்த்தால் வீடு வாடகை குறையும். ஆனால், தினசரி அலைய வேண்டும். தனியாக பெட்ரோலுக்கு செலவழிக்க வேண்டும்.
ஏசி, பிரிட்ஜ் எல்லாம் சேர்த்தால் மாதம் 1000 ஆகிவிடும். இத்துடன் பைக் இஎம்ஐ 2000, பெட்ரோல் 2000 நிச்சயம் ஆகிவிடும். இது தவிர ஓடிடி, செல்போன், மொபைல் ரிசார்ஜ், இன்டர்நெட் ரீசார்ஜ், நான் வெஜ், முட்டை, பால், மளிகை சாமான், வெளியே சென்று வருவது, மேக்அப் பொருட்கள், மருந்து மாத்திரை, துணிகள், வெளியே விஷேசத்திற்குச் சென்றால் ஆகும் செலவு, ஊருக்குச் சென்றால் ஆகும் செலவு, எனப் பல செலவுகள் இருக்கிறது" என்று சொல்லி தனியாக பட்ஜெட் போட வைத்தார்.
மேஜிக் நம்பர் எவ்வளவு: அது அனைத்தையும் சேர்த்து கணக்குப் போட்டால் சேர்த்தால் மொத்தம் 68,660 ரூபாய் வந்தது. தொடர்ந்து பேசிய அவர், "இது போகச் சேமிப்பு தனியாக இருக்க வேண்டும். குறைந்து 25 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும். இதனால் தான் போதிய வருமானம் இல்லையென்றால் திருமணம் செய்ய வேண்டாம் என்கிறேன். இதனால் தான் பட்ஜெட் போடச் சொல்கிறேன். எவ்வளவு தூரம் செலவைக் குறைந்தாலும் 55 ஆயிரம் ஆகலாமே தவிர. அதைத் தாண்டி கீழே குறைக்க முடியாது.வைக் குறைந்தாலும் 55 ஆயிரம் ஆக்கலாமே தவிர. அதைத் தாண்டி கீழே குறைக்க முடியாது.
நான் பஸ்ஸில் போ என்பேன், எதற்கு நெட் என்பேன். ஆனால், கேட்க மாட்டார்கள். என்னைத் திட்டுவார்கள் 40 ஆயிரம் சம்பளம் வாங்கினால் திருமணம் செய்யலாம் என்றேன். ஆனால், இப்போது பணவீக்கம் வந்துவிட்டது. 55,000 முதல் 60 ஆயிரம் சம்பளம் இல்லையென்றால் வாழ்க்கை நடத்துவதே கஷ்டம். இது ஒரு நபரின் வருமானம் இல்லை கணவன் மனைவி சேர்ந்து சம்பாதிக்க வேண்டியது. எனவே, சென்னையில் 55,000 இல்லையென்றால் தயவு செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம்" என்று நறுக்கென முடித்தார்.












Click it and Unblock the Notifications