EXCLUSIVE: சீமானுக்கு சான்ஸ்.. அதிமுக மோதலால் நாம் தமிழருக்கு "பூஸ்ட்".. அரசியல் விமர்சகர் கணிப்பு!
சென்னை: அதிமுகவில் நிலவும் மோதல் காரணமாக அக்கட்சியின் வாக்குகளை நாம் தமிழர் சீமான் பிரிப்பார், நாம் தமிழர் கட்சிக்கு இதனால் ஒரு பூஸ்ட் கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஒற்றை தலைமை மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிட்டாலும், இதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் நேரடியாக முறையிட்டு உள்ளதால் ஒற்றை தலைமை விவகாரம் இப்போதைக்கு முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
பந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கு சென்று உள்ளது. இதனால் அதிமுக சின்னமே கூட முடங்கும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

ரவீந்திரன் துரைசாமி பேட்டி
இந்த நிலையில், அதிமுக மோதலால் சீமான் அதிக பலன் அடைவார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், அதிமுக என்பது தற்போது ஆட்சியில் இல்லாத கட்சி. ஆட்சி இருந்திருந்தால் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆன பின் அதை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது அவர்கள் தோற்றுப்போன கட்சி. தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக வாக்குகள் பிரியும். எடப்பாடி ஒரு பக்கம் வாக்குகளின் ஷேரை எடுப்பார். ஓ பன்னீர்செல்வம் பாதி ஷேரை எடுப்பார். நாம் தமிழர் சீமானும் அதிமுக வாக்குகளை பிரிப்பார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா இருந்த போது 1 சதவிகித வாக்குகளை மட்டுமே சீமான் எடுத்தார். ஆனாலும் ஜெயலலிதா இருந்த போது எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை விட அதிக கூட்டத்தை ஈர்த்தது சீமான்தான். இனப்பிரச்சனை தொடங்கி தமிழர் பிரச்சனை வரை பல விஷயங்கள் பற்றி சீமான் பேசி வருகிறார். ஜெயலலிதாவும் ஈழப்பிரச்சினை பற்றி பேசினார். ஆனால் இப்போது எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இதை பற்றி பேசுவது இல்லை.

சீமான்
2021ல் சீமான் 7 சதவிகித வாக்குகளை பெற்றார். ஆனால் ஜெயலலிதா இருந்த போது அதிமுக 41 சதவிகித வாக்குகளை பெற்றது. அதுவே எடப்பாடி - ஓபிஎஸ் கீழே இந்த வாக்குகள் 33 சதவிகிதமாக குறைந்தது. எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஈழ பிரச்சனை, தமிழர் பிரச்சனைகளை பேசுவது இல்லை. அதுவும் இதற்கு காரணம். கடந்த முறை சீமானுக்கு ஒரு பூஸ்ட் கிடைத்தது.

வாக்குகள் பிரியும்
அதேபோல் தற்போது இவர்கள் இருவரின் மோதல் காரணமாக மீண்டும் சீமானுக்கு பூஸ்ட் கிடைக்கும். அதோடு சீமான் ஆதி தமிழருக்கு தனி தொகுதி இல்லை, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்று சீமான் பேசுகிறார். இப்படி சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் சீமான் பேசுகிறார். அதிமுக செய்ய வேண்டியதை சீமான் செய்கிறார். அவர்களின் வாக்குகளை சீமான் பிரிக்க வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக பிளவு
அதிமுக பிளவால் தமிழ் தேசியம் கண்டிப்பாக பலன் அடையும். இந்த பிளவு சீமானுக்கும் ஒரு பூஸ்ட் கிடைக்கும். அதேபோல் இந்துத்துவா அமைப்புகளுக்கும் ஒரு இந்த பிளவால் பலன் கிடைக்கும். அதிமுகவிடம் இருந்து ஒரு வாக்கு வங்கியை இந்துத்துவா அமைப்புகள் எடுக்கும். ஜெயலலிதா ஒரு வித இந்துத்துவா சார்பை கொண்டு இருந்தார். இப்போது அவர் இல்லாததால் அந்த வாக்குகள் இந்துத்துவா அணிகளுக்கு செல்லும்.
தோற்றுப்போன கட்சி
இது தோற்றுப்போன கட்சியின் பிளவு. ஆளும் கட்சியின் பிளவு அல்ல. கருணாநிதி வைகோ, ஜெயலலிதா ஜானகி போன்ற பிளவு கிடையாது. இது தோற்றுப்போன கட்சி என்பதால் கண்டிப்பாக வாக்குகள் பிரியும். அதிமுகவிற்கு பெரிய சேதாரத்தை இது கொடுக்கும். இதுதான் என்னுடைய கணிப்பு, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். ரவீந்திரன் துரைசாமியின் முழு வீடியோவையோ மேலே உள்ள வீடியோவில் காண்க.












Click it and Unblock the Notifications