ஆமா.. ஒரு போலீஸ்காரரால் எப்படி 30 கோடி ரூபாய் சேர்க்க முடிந்தது? அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரவக்குறிச்சி தேர்தலில் சிறுக சிறுக சேர்த்த பணத்தை செலவழித்து தான் கடனாளி ஆகிவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், காவல் அதிகாரியால் 8, 9 ஆண்டுகளில் எப்படி ரூ.30 கோடி சம்பாதிக்க முடியும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு பாஜகவுக்கு அதிமுகவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்த இரு கட்சிகள் இடையேயான மோதல் பெரிதானது.

தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை வளர்க்க முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், நான் வகித்து வகும் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடர்வேன்.

கடனாளியான அண்ணாமலை

கடனாளியான அண்ணாமலை

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவு செய்யும். நான் எனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளேன். பணம் இல்லாமல் அரசியல் செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரியாக சிறுக சிறுக பணம் சேர்த்து அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து இப்போது கடனாளியாகிவிட்டேன்." என்று தெரிவித்து இருந்தார்.

ரூ.15 லட்சம் எங்கே?

ரூ.15 லட்சம் எங்கே?

அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்து உள்ள பேட்டியில், "ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார்களே. அண்ணாமலையை சந்தித்து அந்த 15 லட்சத்துக்கான வட்டியையும் சேர்த்து போட சொல்லுங்க. மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் மிகத்தெளிவாக இந்த பட்ஜெட்டில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

எப்படி ரூ.30 கோடி?

எப்படி ரூ.30 கோடி?

கடனாளியாக இருக்கிறேன். சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் சேர்த்து செலவு பண்ணிட்டேன். கடனாளி ஆகிவிட்டேன் என்று சொன்னதாக பார்த்தேன். நீங்கள் கேட்டு இருப்பீர்கள். எனக்கு தெரிந்து 8, 9 ஆண்டுகளில் எந்த காவல்துறை அதிகாரியும் ரூ.30 கோடியை சம்பளம் வாங்கி சேர்க்க முடியாது.

 ரூ.1000 கொடுத்த அண்ணாமலை

ரூ.1000 கொடுத்த அண்ணாமலை

அரவக்குறிச்சி தேர்தலில் அவரது செலவு ரூ.30 கோடி என்று நான் நினைக்கிறேன். அதில் ஒரு சீட்டு வந்தது. அதில், சொந்த நிதி எவ்வளவு என்று பார்த்தால் NIL என்று இருந்தது. ரூ.30 கோடி செலவு அவருக்கு. தேர்தலில் அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு ரூ.1,000 பணத்தை கொடுத்தார் நீங்கள் சொன்ன நபர்.

கணக்கில் எவ்வளவு எடுத்தார்?

கணக்கில் எவ்வளவு எடுத்தார்?

அதெல்லாம் காவல் அதிகாரியாக இருந்து கர்நாடகாவில் சிறுக சிறுக சேர்த்த பணம். அதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கணக்கில் இருந்து எவ்வளவு செலவு செய்தார்? நண்பர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்? உறவினர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்? என்பதை பார்க்க வேண்டும். தடம் மாறி செல்ல வேண்டாம். அதை தனியாக ஒருநாளில் பேசுவோம்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+