ஒரே ஒரு ஹோம் டூர் வீடியோ.. டோட்டல் டேமேஜ்.. கிளியால் ரோபோ சங்கருக்கு வந்த புது தலைவலி
சென்னை: ஒரேயொரு ஹோம் டூர் வீடியோ போட்டதால் வந்த வினை.. டோட்டலாக டேமேஜ் ஆகி இருக்கிறார் ரோபோ சங்கர். ஹோம் டூர் வீடியோவை பார்த்து தான் கிளி வளர்த்த விஷயம் வெளியே தெரிய வந்ததாம். கடைசியில் 2.50 லட்சம் ரூபாய் அபராதம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டதுடன், விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட வேண்டும் என்கிற அளவிற்கு மாறி உள்ளது.
பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து ஹோம் டூர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி நடிகர் நடிகைகள் வெளியிடும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால் உற்சாகமாக அவர்கள் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிடுகிறார்கள். பல நடிகைகள், நடிகர்கள், குறிப்பாக சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள், தங்களின் வீடுகளை வீடியோ எடுத்து ஹோம் டூர் வீடியோ என வெளியிடுகிறார்கள்.
அப்படித்தான் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகர் ரோபோ சங்கர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் வளர்க்கும் 2 அலெக்சான்ட்ரியன் கிளிகள் குறித்து, ஹோம் டூர் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

தேடிப்போன வனத்துறை
கடைசியில் அந்த வீடியோ வனத்துறை அதிகாரிகளின் கண்களிலும் பட்டுவிட்டது. என்னடா இது, வெளிநாட்டு கிளியாக இருக்கிறதே, இதுஎப்படி இவர்கள் வளர்க்கிறார்கள் என்று உடனடியாக, ரோபோ சங்கரின் வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று பார்த்து இருக்கிறார்கள், ஆனால் ரோபோ சங்கர் அப்போது குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து திரும்பி சென்றனர்.

அலெக்ஸாண்ட்ரியன் கிளிகள்
இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் கடந்த 15ம் தேதி, ரோபோ சங்கர் வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த நபர்களிடம், அனுமதியின்றி வளர்த்து வந்த வெளிநாட்டு அலெக்ஸாண்ட்ரியன் கிளிகள் குறித்து விசாரித்திருக்கிறார்கள். அதன் பிறகு, இரு கிளிகளையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளை உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

ரோபோ சங்கர் மனைவி
இதுகுறித்து நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா பேசும் போது, 4 வருடங்களுக்கு முன்பு, இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நண்பர் ஒருவர் 2 கிளிகளை பரிசாக கொடுத்தார். இந்த கிளிகளை நான் விலை கொடுத்து வாங்கவில்லை . வீட்டில் பிறந்த குழந்தைகள் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்வதில்லையா... அதேபோலவே கிளிகள் தங்களை விட்டு பிரிந்ததாக நினைத்துக் கொள்கிறோம் என்றார்.

இரண்டரை லட்சம் அபராதம்
இந்த நிலையில், உரிய அனுமதியின்றி அலெக்சான்ட்ரியன் கிளிகள் வளர்த்து வந்தது குறித்து நடிகர் ரோபோ சங்கரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணையும் நடத்தி இருக்கிறார்கள். ஆனால், அவரது விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை என்று கூறிய வனத்துறை அதிகாரிகள், ரோபோ சங்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் வீட்டில் இந்த மாதிரியான கிளிகள் வளர்ப்பது தவறு என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிடவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. ஒரே ஒரு ஹோம் டூர் வீடியோ போட்டதால் ரோபோ சங்கர் இப்போது சிக்கலில் சிக்கி இருக்கிறார் என சினிமா துறையினர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications