ரூ.480 கோடி அபராதம் கட்டி சென்னை போயஸ் கார்டன் புது பங்களாவை மீட்ட சசிகலா-கிரகப்பிரவேச குஷி பின்னணி!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை விதித்த அபராதத் தொகை ரூ.480 கோடியை கட்டித்தான் தற்போது கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கும் சென்னை போயஸ் கார்டன் பங்களாவை மீட்டுள்ளார் சசிகலா என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர் சசிகலா. சிறையில் இருந்து விடுதலையாகி 4 ஆண்டுகளாகிறது. . ஆனால் சசிகலா எந்த ஒரு தீவிர அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறைக்கு போவதற்கு முன்னர் ஓபிஎஸ்ஸை ஒழிப்பேன் என சபதம் போட்டார் சசிகலா. இப்போது ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் இணையும் புள்ளிகளாக இருக்கின்றனர்.

ஒரே பல்லவி: 4 ஆண்டுகளாகவே, ஒவ்வொரு முறை செய்தியாளர்களை சந்திக்கும் போதும் அண்ணா திமுகவை ஒருங்கிணைப்பேன்; என்னால் முடியும்; அதிமுக ஒருங்கிணைந்துவிட்டால் திமுகவால் 1 சீட் கூட ஜெயிக்க முடியாது என ஆவேசம் மட்டும் காட்டுகிறார் சசிகலா. ஆனால் ஆக்ஷன் எதுவுமே இல்லை என்பதால் சசிகலாவை சுற்றியிருந்த கூட்டம் மொத்தமாகவே விலகிவிட்டது.
கொடநாடு விசிட்: இந்த நிலையில் திடீரென சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களா சென்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக 7 ஆண்டுகள் கழித்து கொடநாடு எஸ்டேட் பங்களா சென்றார் சசிகலா. அத்துடன் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் நினைவிடம், உருவசிலை அமைப்பது ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் 7 ஆண்டுகளில் முதல் முறையாக திடீரென கொடநாடு எஸ்டேட் செல்லும் சசிகலா!
சென்னை புது பங்களா: இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு நேர் எதிரே பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புது பங்களாவுக்கு கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறிவிட்டார் சசிகலா. புது பங்களா நிகழ்ச்சியில் அவ்வளவு மகிழ்ச்சியாக காணப்பட்டார் சசிகலா. இனி அரசியல் ஆட்டங்களை சசிகலா அதிரடியாக ஆரம்பிப்பார் எனவும் கூறப்படுகிறது.

சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம் கிரகப்பிரவேசம்- ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே!
ரூ480 கோடி அபராதம்: இது தொடர்பாக சசிகலா தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ10 கோடி. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்த அமலாக்கத்துறை, விதித்த அபராத தொகை ரூ480 கோடி. இந்த ரூ480 கோடி அபராதத் தொகையை அண்மையில்தான் கட்டினாராம் சசிகலா. இதனையடுத்தே இதுவரை முடக்கப்பட்ட அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுவிட்டனவாம். அதில் ஒன்றுதான் போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு இன்று கிரகப்பிரவேசம் நடத்தப்பட்ட பங்களாவுமாம். ஒருவழியாக அத்தனை சிக்கல்களையும் தீர்த்துவிட்ட சசிகலா இனி தீவிர அரசியலில் முழு வீச்சாக இறங்குவார் என்கின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications