"வர்றியா".. உன்னதான் வர்றியா.. ராத்திரி நேரத்தில் நடுங்கிப்போன ஷர்மிலி.. கடைசியில்தான் ட்விஸ்ட்டே
சென்னையில் பெண் போலீசிடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: அபரிமிதமான அர்ப்பணிப்பு உணர்வுடனும், எல்லைமீறிய தாய்மை உள்ளத்துடனும் எத்தனையோ, பெண் காவலர்கள் நமக்காக பணியாற்றி வரும் நிலையில், அவர்களும் சில சந்தர்ப்பங்களில் தர்மசங்கட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நம் சென்னையில் நடந்துள்ளது..!
செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிலி.. 32 வயதாகிறது.. இவர் ஒரு போலீஸ்காரர்.. தாம்பரம் மாநகரத்திற்கு உட்பட்ட கானத்தூர் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார்.
தாம்பரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் என்பவரின் அம்மா மகாலட்சுமி.. இவருக்கு 79 வயதாகிறது.. உடம்பு சரியில்லை.. அதனால், மத்திய கைலாஷ் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்..

டியூட்டி
அங்கு அவருக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.. வாய்மொழி உத்தரவின்பேரில், இவரை ஆஸ்பத்திரிக்கு சென்று போலீசார் பார்த்து வருவார்கள்..அந்த வகையில், ஷர்மிலிக்கும் டியூட்டி போட்டுள்ளனர்.. அதன்படி, மகாலட்சுமியை கவனிக்க காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஷர்மிலிக்கு டியூட்டி போடப்பட்டது.. அப்படித்தான் நேற்று முன்தினம் டியூட்டியில் இருந்தார்.

டிராபிக் ஜாம்
இரவு 8 மணிக்கு மேல், தாம்பரம் ஆயுதப்படை காவலர் சரவணன் என்பவர் டியூட்டி பார்க்க வேண்டும்.. ஆனால், சரவணனுக்கு வழியில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டதால், சரியான நேரத்தக்கு மருத்துவமனைக்கு வரமுடியவில்லை. அதனால், ஷர்மிலிதான் டியூட்டியை தொடர்ந்தார்.. சரவணன் இன்னும் வந்து சேராததால், மருத்துவமனை கேட் பகுதியிலேயே ஷர்மிலி காத்திருந்தார்.. அப்போது மணி 8.30.

வர்றியா.. ஏம்மா
அந்த வழியாக ஒரு இளைஞர் பைக்கில் போனார்.. கேட் வாசலில், மஃப்டியில் நின்று கொண்டிருந்த ஷர்மிலியை பார்த்தார்.. பைக்கை அந்த செகண்டே நிறுத்திவிட்டார்.. ஷர்மிலி அருகில் சென்று, "ஏம்மா வர்றியா... உன்னை தான்.... வர்றியா' என்று கூப்பிட்டுள்ளார்.. இதை ஷர்மிலி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதிர்ந்து போய் நின்றவர், பிறகு வேகவேகமாக மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து, அந்த இளைஞர் சென்றிருப்பார் என்று நினைத்து, மறுபடியும் ஆஸ்பத்திரி கேட் பகுதிக்கு வந்தார்.

ஷர்மிலி
ஆனால், அந்த இளைஞர் அங்கே தான் நின்று கொண்டிருந்தார்.. ஷர்மிலியை பார்த்ததும், மறுபடியும் வர்றியா... உன்னை தான்.... வர்றியா" என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்.. அப்போதுதான் கொந்தளித்துபோனார் ஷர்மிலி.. "ஏன்டா.. நான் யார்னு உனக்கு தெரியாதா? இப்படித்தான் எல்லாரையும் கூப்பிடுவியா என்று சரமாரியாக திட்ட ஆரம்பித்தார்.. அப்போதுதான் சரவணன் அங்கு வந்து சேர்ந்தார்.. என்ன நடந்தது என்று கேட்கவும், சரவணனிடம் நடந்ததை எல்லாம் சொல்லி ஆவேசமானார் ஷர்மிலி..

மன்னிப்பு கேள்
இதை கேட்டு ஆத்திரமடைந்த சரவணன், அந்த இளைஞரிடம் சென்று, "ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவது, பெண் போலீஸிடமே இப்படி நடந்து கொள்வது சரியா? அவரிடம் வந்து மன்னிப்பு கேள்" என்று கூறியுள்ளார். பெண் போலீஸ் என்று தெரியாமல், அத்துமீறி நடந்து கொண்ட சம்பவத்துக்கு அந்த இளைஞர் வருத்தப்படுவார் என்று நினைத்தால் அது தவறு..

பைக் சாவி
அந்த பெண் போலீஸை "அப்படித்தான் கூப்பிடுவேன்" என்று கெத்தாக சரவணனிடம் சொல்லி உள்ளார்.. மேலும், போனை போட்டு, நண்பர்கள் உதயகுமார், பழனிசாமி ஆகியோரை வரவழைத்தார்.. அவர்களுடன் சேர்ந்து போலீஸ்காரர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.. இதற்கு மேல் பொறுமையிழந்த சரவணன், அந்த இளைஞரின் செல்போன், பைக் சாவியை பிடுங்கி கொண்டு, மத்திய கைலாஷ் சிக்னலில் நின்று இருந்த டிராபிக் போலீசாரிடம் நடந்த சம்பவத்தை சொல்லி ஒப்படைத்துவிட்டார்.

கேஸ் பதிவு
இதற்கு பிறகு, ஷர்மிலியும், கோட்டூர்புரம் போலீசில் இளைஞர் பற்றி புகார் அளித்தார்... அதன்படி போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.. அந்த இளைஞர் பெயர் விக்னேஷ்.. 29 வயதாகிறதாம்.. சென்னை கலிக்குன்றம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவராம்.. இறுதியில், ஐபிசி 332, 353 மற்றும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விக்னேஷை கைது செய்தனர் போலீசார்.. பெண் போலீசாருக்கே சைகை காட்டி அத்துமீறிய சம்பவம் மத்திய கைலாஷ் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.












Click it and Unblock the Notifications