ஐடி முதல் விவசாயம் வரை.. இந்தியா - EU ஒப்பந்தத்தால்.. தமிழகத்திற்கு கிடைக்க போகும் நன்மைகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பல்வேறு பொருட்களின் வரி விகிதம் குறையும், முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உருவாகி தமிழ்நாட்டின் தொழில்துறை, விவசாய மற்றும் தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு உதவும். இதில் ஐடி முதல் விவசாயம் வரை தமிழகத்திற்கு இந்த ஒப்பந்தத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பல்வேறு பொருட்களின் வரி விகிதம் குறையும். இதன் மூலம் அவற்றின் விலையும் கூட கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

India European Union India EU tamilnadu

தமிழ்நாட்டிற்கு என்ன பலன்கள்

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம் தற்போது ஆண்டுக்கு ரூ.6.4 லட்சம் கோடி அளவில் உள்ளது. இதில் 20 சதவீதம் வரை தமிழகத்தின் பங்கு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தற்போது போடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பலன்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

புதிய ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது இதனால், தமிழகத்தின் முக்கிய ஏற்றுமதி துறைகள் அனைத்தும் நேரடியாக பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற நகரங்கள் இந்தியாவின் துணி மற்றும் ஆடை ஏற்றுமதியின் மையமாக உள்ளன.

சுங்க வரி பூஜ்ஜியம்

ஐரோப்பிய யூனியன் சந்தையில் இதுவரை 8 முதல் 12 சதவீதமாக இருந்த சுங்கவரி தற்போது ஜீரோ ஆகியிருப்பதால், தமிழகத்தின் ஜவுளித்துறை உலக சந்தையில் அதிக போட்டித்திறன் பெறும். பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் உயரும்.

தமிழ்நாட்டில் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் காலணி தயாரிப்பு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உள்ளது. தற்போது இந்த பொருட்களுக்கு 10% இறக்குமதி வரி நீக்கப்பட்டதால் நேரடி சந்தை திறப்பு கிடைத்துள்ளது.

தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களில் உற்பத்தியாகும் இறால், நண்டு, மீன் வகைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ஏற்றுமதி நடைமுறைகள் எளிதாக்கப்படுவதால், மாநிலத்தின் மீன்வள ஏற்றுமதி மேலும் மேம்படும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை

பொள்ளாச்சி, தேனி, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பொருட்கள், மிளகு, மஞ்சள், பழச்சாறு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கும் ஐரோப்பிய யூனியன் சந்தையில் தடைப்பட்டிருந்த இறக்குமதி வரிகள் குறைந்து இருப்பதால் ஏற்றுமதி மேம்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒரகடம், ஓசூர், சென்னை பகுதிகளில் உள்ள ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் சந்தை, மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மாநிலத்திற்கு புதிய வெளிநாட்டு முதலீடுகளும் ஈர்க்கப்படும். இது மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை பெருக்கும்.

மருத்துவ உபகரணங்களின் விலை குறையும்

இது மட்டும் இன்றி பொதுவாக பார்த்தோம் என்றால், மருத்துவத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏனெனில் ஐரோப்பா வலுவான சுகாதார கட்டமைப்புக்கு பெயர் போனது.

தற்போது போடப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தின் மூலம் கேன்சர் மற்றும் பிற முக்கியமான நோய்களுக்கு எதிரான மருந்துகள் விலை இந்தியாவில் மலிவாக கிடைக்கும். மருத்துவ உபகரணங்களின் விலையும் குறையக்கூடும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும் ஐரோப்பிய 27 சந்தைகளுக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+