உச்ச நீதிமன்றத்தில் SIRஐ எதிர்த்துவிட்டு.. களத்தில் தீவிரமாக வேலை பார்த்த திமுக? இரட்டை நிலைப்பாடு?
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் திமுக ஒரு பக்கம் SIRக்கு எதிராக வழக்கு போட்டுவிட்டு, இன்னொரு பக்கம் SIR பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. திமுக இதில் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
முக்கியமாக ஆளும் கட்சித் தொண்டர்கள் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகளில் அதீதமாக தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் அளவிற்கு திமுகவின் சில செயல்பாடுகள் உள்ளன.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன?
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கும் திருத்துவதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவும் அல்லது தேவைப்படும்போதும் ஆணையம் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும். அடிக்கடி ஏற்படும் இடமாற்றங்கள், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமை போன்ற காரணங்களால் SIR பணிகள் செய்யப்படுகின்றன.

ஒரு வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தவிர்க்க இந்தச் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) அறிவிக்கப்பட்டது. தகுதியான யாரும் விடுபடாமலும், தகுதியில்லாதவர்கள் பட்டியலில் இடம்பெறாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
BLO அதிகாரிகளின் பணிகளில் தலையிடும் ஆளும் திமுக?
இப்படிப்பட்ட அதிமுக்கியமான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் (SIR) பணிகளில் ஆளும் திமுக கட்சி முகவர்கள் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) செய்யும் பணிகளை திமுக கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்கின்றன.
திமுக ஆதரவு பூத் நிலை முகவர்களுக்கு (BLA) படிவங்களை கொடுக்க வேண்டும் என்று BLOக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. பல பகுதிகளில் திமுக முகவர்களே படிவ விநியோகிப்பு மற்றும் சேகரிப்பில் தீவிரமாக உள்ளனர். சில இடங்களில் திமுக முகவர்களே படிவங்களை நிரப்பி அதிகாரிகளிடம் கொடுத்து விடுகின்றனர். கிட்டத்தட்ட SIR பணிகளை திமுக கையகப்படுத்தி, மற்ற கட்சியினருக்கு தலைவலியை கொடுத்துள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் முறையான பல புகார்கள் செய்யப்பட்டு உள்ளன. திமுக தொண்டர்கள், முகவர்கள் BLO அதிகாரிகளை கட்டுப்படுத்த பார்க்கிறார்கள், இதனால் SIR பணிகள் ஒருதலைப்பட்சமாக நடப்பதாக அதிமுக தலைவர்கள், தவெக தலைவர்கள் உட்பட பல எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளனர். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அதிமுக தலைவர்கள் ஊடகங்களிடம் கூட தெரிவித்து உள்ளன.
தேர்தல் ஆணையமும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தன. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர் எவரையும் நீக்க முடியாது என்றும், BLO-க்களை தவறாக வழிநடத்த முடியாது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருந்தாலும் ஆளும் திமுகவே களத்தில் பணிகளை கட்டுப்படுத்துவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
SIR பணிகளுக்கு களத்தில் ஆதரவு- உச்ச நீதிமன்றத்தில் மட்டும் திமுக வழக்கு
நாடு தழுவிய SIR திட்டத்தை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. நாடு முழுக்க உயர் நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இது தொடர்பான மற்ற மனுக்களை விசாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது. இதனால் SIR தொடர்பான மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் SIR பணிகளை மொத்தமாக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக திமுக மீது புகார்கள் வைக்கப்பட்ட அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, SIR பணிகளை முடக்க பார்த்தது. கிட்டத்தட்ட இரட்டை நிலைப்பாடு போல இதில் திமுக செயல்பட்டது. SIR பணிகள் சட்டவிரோதமானவை, அவை தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி செய்யப்படுவதாக ஆளும் திமுக வாதங்களை வைத்தது. இதனால் பல வாக்காளர்கள், முக்கியமாக அடித்தட்டு மக்கள் நீக்கப்படலாம் என்று திமுக வாதம் வைத்தது.
SIR வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் திமுகவிற்கு குட்டு
ஆனால்.. திமுகவிற்கு இதில் கிட்டத்தட்ட ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் பீகார் தொடர்பான SIR விசாரணைகளில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளை பாராட்டியது. SIR பணிகள் வாக்காளர் நலன் சார்ந்த நடைமுறை என விவரித்த நீதிமன்றம், அடையாள ஆவணங்களை ஏழிலிருந்து பதினொன்றாக அதிகரித்த நடவடிக்கையைப் பாராட்டியது.
தேர்தல் ஆணையத்திற்கு SIR-ஐ மேற்கொள்ள அதிகாரம் உண்டு. பீகார் மாநிலம் முழுவதும் SIR நடத்துவதற்கான காரணம் சரியானதாகவே இருந்தது. அங்கே நடத்தப்பட்ட SIR பணிகளில் தவறு இல்லை. அனைத்து தொகுதிகளுக்கும் பணிகள், நடைமுறைகள் பொதுவானதாக இருந்தால், இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) குறை கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது வழக்கமான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு அல்ல, மாறாக ஒரு சிறப்பு திருத்தம். நியாயமான மற்றும் வெளிப்படையான எந்தவொரு செயல்முறையும் செய்ய ECIக்கு அதிகாரம் உள்ளது. ECI-க்கு அதைச் செய்ய அதிகாரம் இல்லை என்பதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும். அப்படி முடியாவிட்டால், SIR பணிகள் தொடரலாம், என்று SIRக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பீகார் SIR-ஐ உச்ச நீதிமன்றம் சட்ட விரோதமானது என கண்டறியவில்லை. மாறாக, சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்யலாம். அதற்காக மொத்த செயல்முறையும் தவறு என்று சொல்ல முடியாது என்று கூறியது. இம்முடிவு தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்தை வலுப்படுத்தி, SIR அரசியலமைப்புக்கு விரோதமானது என்ற கூற்றுகளை வலுவிழக்கச் செய்துள்ளது.
SIR மூலம் நீக்கப்படும் இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் பெயர்கள்
இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்குவது, முந்தைய பட்டியலில் விடுபட்ட தகுதியான வாக்காளர்களைச் சேர்ப்பது SIR-ன் முக்கிய நோக்கமாகும். நாடு முழுவதும் SIR மூலம் பல மில்லியன் தவறான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
உதாரணமாக, குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரி, SIR பணிகளின்போது இறந்த மற்றும் இடம் மாறியோர் உள்ளிட்ட மில்லியன் பதிவுகள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் இது போன்ற நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னையில் இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. சென்னையில் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்த பணிகளின் முதல் வாரத்தில், கிட்டத்தட்ட 25% வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடமாற்றம், இரட்டை விண்ணப்பம் அல்லது மறைவு போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் புதிய முகவரியில் மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராயபுரம் தொகுதியில் சுமார் 400 பெயர்கள் நீக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, 1,500 வாக்காளர்களில் சுமார் 400 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "சுமார் 50 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்," என்றார். சண்முகராயன் தெருவில் உள்ள அதிகாரிகள், 700 வாக்காளர்களில் இதுவரை 150 பேரை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது என்று தெரிவித்தனர்.
அதிகாரிகளில் ஒருவர், "நாங்கள் சென்றபோது பலர் வீட்டில் இல்லை. மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிப்போம்," என்றார். மேற்கு ஜாஃபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, 1,409 வாக்காளர்களைச் சரிபார்க்க தங்கள் குழு 492 படிவங்களை விநியோகித்தது என்றார்.
அதில் 30 இறப்புகள் உட்பட 340 பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் புதிய தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். சேப்பாக்கம் தொகுதியில் ஒரு கணக்கெடுப்பாளர், 1,111 வாக்காளர்களில் சுமார் 225 பெயர்கள் நீக்கப்படலாம் என்றார். காரணம் அவர்கள் இடம்பெயர்ந்தவர்கள் அல்லது இறந்தவர்கள். விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, ஆய்வு செய்யப்பட்ட 1,419 வாக்காளர்களில், ஏழு மரணங்கள் உட்பட சுமார் 30 பெயர்கள் நீக்கப்படலாம் என்று தெரிவித்தார். வேளச்சேரியில் சுமார் 1500 இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
சுமார் 40 லட்சம் மக்களின் வாக்காளர் தரவுகளை நிர்வகிக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் தகவலின்படி, இதுவரை சுமார் 37 லட்சம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு, நீக்கப்பட்ட பெயர்களின் இறுதிப் பட்டியலைத் தேர்தல் பதிவு அலுவலகம் உறுதிப்படுத்தும்.
திருநெல்வேலியில் சுமார் 78,000 பெயர்கள் இறந்தவர்கள், போலி பதிவுகள், மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 4.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் சரிபார்ப்பு படிவங்கள், இம்மாவட்டத்தின் 96.04% குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற ஆய்வின்போது, சுமார் 78,000 பெயர்கள் இறந்தவர்கள், போலி பதிவுகள், மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் போன்ற பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் சுகுமார் இது குறித்துப் பேசுகையில், "எஸ்ஐஆர் செயல்முறை முடிந்ததும், இந்த 78,000 பதிவுகளும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் மூலம் வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார்.
மக்களை பயமுறுத்தும் திமுக?
SIR பணிகள் இப்படி நேர்மையாக, வெளிப்படையாக, ஒரே மாதிரி நடக்கும் நிலையில் திமுக மட்டும் இதில் அரசியல் செய்கிறதோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. SIR காரணமாக சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தல் என்றும், கட்சி சார்பு உள்நோக்கத்துடன் கூடியது என்றும் கூறி திமுக மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஒரு பக்கம் வழக்கு தொடுத்து SIRஐ முடக்க பார்க்கிறார்கள்.. இன்னொரு பக்கம் தங்கள் BLAக்களை களமிறக்கி BLO பணிகளை கைப்பற்ற பார்க்கிறார்கள் என்று திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மக்கள் இடையே SIR பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல்.. உங்கள் பெயர் நீக்கப்படும், நீங்கள் வாக்களிக்க முடியாமல் போகும் என்று அச்சத்தை திமுக பரப்பி வருகிறது. உச்ச நீதிமன்றமோ, அரசியல் வல்லுனர்களோ , ஏன் பொதுமக்களோ கூட SIRஐ பெரிதாக களத்தில் எதிர்க்காத நிலையில் திமுக மட்டும் இதில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications