சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடைத்தரகர்களுக்கு வேட்டு! பட்டா மாறுதல் ஈஸி! நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! எளிய வழிமுறைகள் இங்கே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக வருவாய்த் துறை வரலாற்றில் பட்டா மாறுதல் உட்பட இன்னும் பல சேவைகளை மிகவும் சுலபமாக்கி பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அரசு.

ஆன்லைனில் நீங்க பட்டா மாற்ற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே படித்து பார்த்து அறிந்துகொள்ளலாம்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

அதே இடம்.. '5 மணி நேரம்'.. ஓபிஎஸ்க்கு போட்டியாக யாகம் நடத்திய ஆர்பி உதயகுமார்..? என்ன திட்டம்! அதே இடம்.. '5 மணி நேரம்'.. ஓபிஎஸ்க்கு போட்டியாக யாகம் நடத்திய ஆர்பி உதயகுமார்..? என்ன திட்டம்!

 வருவாய்த்துறை

வருவாய்த்துறை

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

பட்டா மாறுதல்

பட்டா மாறுதல்


நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் (Common Service Centres) மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்தும் எந்நேரத்திலும்

எங்கிருந்தும் எந்நேரத்திலும்

இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் / பொதுசேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமிருக்காது, பொதுமக்கள் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் ஒழிப்பு

இடைத்தரகர்கள் ஒழிப்பு

இதனால், பொதுமக்கள், பொதுசேவை மையங்களுக்கு செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.
நகர்ப்புரங்களுக்கான வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துதல் தமிழ்நாட்டில் நகர்ப்புர நில ஆவணங்கள் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கணினிப்படுத்தப்பட்டு தமிழ்நிலம் (நகர்ப்புரம்) என்னும் மென்பொருள் மூலம் படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இணையதள முகவரி

இணையதள முகவரி

கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இப்புதிய வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புர நிலவரைபடங்களை இணையவழியில் கட்டணமின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன், பொதுமக்கள், நகரநிலவரைபடம் பெரும்பொருட்டு வட்டாட்சியர் அலுவலகம் வருவது தவிர்க்கப்படும்.

English summary
How to Change Patta Name in Tamil Nadu Online (பட்டா மாறுதல் செய்வது எப்படி?) : Check out the Online Patta Transfer Or Name Change Procedure Steps in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X