Chennai Wonderla: ரூ.1800 இல்லை.. 40% கம்மி விலையில் வொண்டர்லா டிக்கெட் புக் செய்யலாம்! சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னை திருப்போரூர் அருகே அமைந்துள்ள வொண்டர்லா தீம் பார்க்கை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நாளை முதல் இந்த தீம் பார்க்கில் மக்கள் அனுமதிக்கப்படும் நிலையில், இதற்கு ரூ.1800 வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 40% வரை சலுகை ரேட்டில் டிக்கெட் புக் செய்ய ஒரு வழி இருப்பது உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.!
இந்தியாவில் பிரபலமான பொழுது போக்கு பூங்கா என்றால் அது "வொண்டர்லா" தான். பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, புவனேஸ்வர் என இந்தியாவில் 4 இடங்களில் வொண்டர்லா வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சென்னையில் இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட தீம் பார்க் இல்லை என்ற குறை நீண்ட காலமாகவே இருந்து வந்தது.

சென்னை வொண்டர்லா
வொண்டர்லா நிறுவனம் தமிழகத்தில் தீம் பார்க் அமைக்கவுள்ளதாக நீண்ட காலமாகவே பேச்சுகள் இருந்தாலும் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வொண்டர்லா தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமையும் என அறிவிக்கப்பட்டது. 65 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ 611 கோடி செலவில் இந்த தீம் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் முதல் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் அமைகிறது. இந்த ரோலர் கோஸ்டர் தான் சென்னை வொண்டர்லாவின் முக்கிய ரைடாக அமையும். மேலும், ஸ்பின் மில், மார்விக் என ஏகப்பட்ட ரைட்கள் உள்ளன. சென்னை வொண்டர்லாவை பொறுத்தவரை 19 லேண்ட் ரைட்கள், 15 வாட்டர் ரைட்கள், 7 குழந்தைகளுக்கான ரைட்கள் அமைகிறது.
டிக்கெட் ரேட்
வொண்டர்லாவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்த நிலையில், நாளை முதல் இதில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். வொண்டர்லாவில் டிக்கெட் விலை வார நாட்களில் ரூ.1536 ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1826 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரொம்பவே அதிகம் என நினைப்பவர்களுக்கு அட்டகாசமான ஒரு சலுகை இருக்கிறது.
சலுகை விலை
அதாவது பிளாக் பிரைடே என்ற ஆஃபர் விற்பனையை வொண்டர்லா அறிவித்திருந்தது. இதன் கீழ் ஒருவர் சலுகை விலையில் வொண்டர்லாவுக்கு செல்லலாம். இதன் கீழ் வார நாட்களுக்கான டிக்கெட்டை ரூ.1100க்கும் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் ரூ.1226க்கு கிடைக்கும். வழக்கமான டிக்கெட் ரேட்டை விட கிட்டத்தட்ட 40% வரை விலை குறைகிறது.
புக் செய்வது எப்படி
இந்தச் சலுகை ரேட்டில் டிக்கெட் வாங்குவது ரொம்பவே ஈஸி. முதலில் வொண்டர்லாவின் அதிகாரப்பூர்வத் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு Book tickets என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் சென்னை வொண்டர்லா என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். எந்த தேதியில் செல்ல விரும்புகிறீர்களோ.. அந்தத் தேதியைத் தேர்வு செய்து அடுத்த பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு Black Friday tickets என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று டிக்கெட்டை புக் செய்வதன் மூலம் 40% வரை சலுகையைப் பெறலாம்.
கடந்த சில நாட்களாகவே இந்தச் சலுகை விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றுடன் (டிசம்பர் 1) இந்தச் சலுகை முடிகிறது. மார்ச் 31ம் தேதி வரை எந்தவொரு நாளுக்கும் இந்தச் சலுகை டிக்கெட்டை பெறலாம். அதாவது மார்ச் 31 வரை எந்தவொரு நாளுக்கு தேவையான டிக்கெட்டையும் நீங்கள் வாங்கலாம். இன்று நள்ளிரவு வரை டிக்கெட் புக் செய்வோருக்குச் சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கும். அதன் பிறகு வழக்கமான ரேட்டிலேயே டிக்கெட் வாங்க வேண்டும்.! எனவே, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications