Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினரை எப்படி அழைக்க வேண்டும்? அகராதி வெளியிட்ட தமிழக அரசு! ஏன் இது முக்கியமானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பின்போது ஒருவரின் பால் அடையாளம் உடல்ரீதியாக உறுதிசெய்யப்படுவது அந்தக் காலம். ஒருவர் வளர்ந்து பருவம் எய்த பிற்பாடு தனது பால் அடையாளத்தை முடிவு செய்வதுதான் இந்தக் காலம்.

இதனை ஏற்றுக்கொள்வதே வளர்ந்து வரும் மனித நாகரிகத்திற்குச் சரியானதாகும். அந்தவகையில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலம்தான்.

மு.கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியிலிருந்தபோதுதான் 2008 ஆம் ஆண்டு முதன்முதலாகத் திருநங்கையர் நலவாரியம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அவர்களின் உரிமைகளை முறையிட அரசு ரீதியாக எந்த அமைப்பு செயல்படவில்லை. அந்த அவலநிலையை அகற்றியதில் மு.கருணாநிதிக்குத் தனி இடம் உண்டு.

முதல் திருநங்கை நலவாரியம்

முதல் திருநங்கை நலவாரியம்

இன்று அதன் வளர்ச்சியில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுகத்தைச் சேர்ந்தவர்களை எவ்வாறு அழைக்கவேண்டும்? எந்த மாதிரியான சொற்களை ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும் என்று ஒழுங்குமுறை ஏற்படுத்துவதற்காக ஒரு சொல் அகராதியைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டு பெருமை சேர்ந்திருக்கிறது. இந்த முயற்சியை ஒடுக்கப்பட வகுப்பினர்மீது அரசுக்கு உள்ள அக்கறையாகக் கருதி பலர் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர். அதில் பிரதானமானவர் மனுராஜ் சண்முகசுந்தரம். இவர் பல ஆங்கில ஏடுகளில் இது தொடர்பானக் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அவரது பார்வையில் அரசின் இந்தச் செயல்பாடு எந்தளவுக்கு ஆக்கப்பூர்வமானது எனக் கேட்டோம்.

பெயர் அடையாளம் மற்றும் சமூகநீதி

பெயர் அடையாளம் மற்றும் சமூகநீதி

"ஒன்இந்தியா தமிழுடன்" பேசிய மனு, "சமூகநீதி அடிப்படையில் என்பது இரண்டுவகையான நீதிகள் உள்ளன. ஒன்று substance justice. ஒருவருக்கு கல்வியில், வேலையில் இடஒதுக்கீடு தருவதுதான் substance justice. மற்றொன்று symbolic justice. சொற்கள் ரீதியாக நீதியை ஏற்படுத்தித் தருவது. இதற்குச் சரியான உதாரணம் கலைஞர். அவர்தான் ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளி என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். எப்படி ஒருவருக்கு வேலையில், கல்வியில் இடஒதுக்கீட்டை ஏற்படுத்தித் தருகிறோமோ அதேபோல symbolic அளவிலும் நீதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

அதன் முன்னோடியாகத்தான் கலைஞர் 2008இல் திருநங்கையருக்கு நலவாரியம் அமைத்துக் கொடுத்தார். இவர்களுக்கு வாரியம் அமைத்ததில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலம். இந்த மூன்றாம் பாலினத்தவருக்குச் சலுகை, இடஒதுக்கீடு எல்லாம் உச்சநீதிமன்றத்தின் 2014ஆம் ஆண்டு தீர்ப்புக்கு அப்புறம்தான் இந்திய அளவில் வருகிறது. அதைத்தொடர்ந்து 2019இல்தான் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியது. ஆனால் அதற்குமுன்பே கலைஞர் அதைச் செய்துவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் 2022 ஜனவரியிலேயே காவல்துறையினரின் யாரேனும் திருநங்கை சமூகத்தைச் சார்ந்தவர்களை உடல்ரீதியாகத் துன்புறுத்தினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனச் சட்டத்தில் மாற்றம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். இப்போது அந்தச் சமூகத்தினரைக் கவுரவிக்கும் வகையில்தான் தமிழக அரசு பால்புதுமையர்களுக்கான சொல் அகராதியை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் மனநிலையில் புதிய மாற்றம் வரும். மக்கள் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுகத்தை மரியாதையுடன் மெல்ல அணுகுவார்கள்' என்கிறார் மனு.

ஐஐடி ஆய்வாளர் கருத்து

ஐஐடி ஆய்வாளர் கருத்து

எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமூகத்தினருக்காகத் தொடர்ந்து இயங்கி வரும் சமூக செயல்பாட்டாளரும் ஐஐடி ஆய்வாளருமான சதிஷ் இளவேலுடன் பேசினோம்.
"திருநங்கை நலவாரியத்தை மு.கருணாநிதி அமைத்தபோது அந்தளவு பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. திருநங்கை என்ற ஒரே சொல்லுக்குள் எல்லோரையும் அடக்கிவிட்டார்கள். ஆனால் இன்று திருநங்கை என்பது அனைவரையும் பொதுவான சொல் அல்ல. அதற்குள் பல பிரிவினர் இருக்கிறார்கள். எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ. ப்ளஸ் கம்யூனிட்டி என்பதுதான் பல தரப்பினரை உள்ளடக்கிய சரியான சொற்பிரயோகம்.

சமூகரீதியான பாதுகாப்பு

சமூகரீதியான பாதுகாப்பு

அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இந்தச் சொல் அகராதியை திமுக அரசு உருவாக்கியுள்ளது. இந்த அரசாணையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் திருநங்கையாகவோ அல்லது திருநம்பியாகவோ இருந்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தி சமூகத்திற்குத் தகுந்தமாதிரி வாழ மருத்துவரீதியாகச் சிகிச்சை அளிக்க நிர்ப்பந்திப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது 'கன்வெர்ஷன் தெரப்பி'யை இந்த ஆணை தடுக்கிறது. மேலும் இந்த ஆணை பால்புதுமையர் தங்களின் வானவில் பேரணியை முறையாக அங்கீகரித்துள்ளது" என்று பல விளக்கங்களை முன்வைக்கிறார் சதீஷ். இந்தச் சமூகத்திற்காக எப்போது இயங்க ஆரம்பித்தீர்கள் என்ற கேள்விக்கு சதீஷ், "இயல்பாகவே என் நட்பு வட்டத்திலிருந்தவர்கள் பலர் இந்த வகுப்பினராக அமைந்திருந்தனர். அவர்களின் நெருக்கடியை நேரில் உணரவேண்டிய தருணம் வந்தது. நமக்கு எளிமையாகக் கிடைக்கும் ஒரு ஆதார் அட்டையைக் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதை அறிந்தேன். அப்போதுதான் இயங்க ஆரம்பித்தேன்" என்கிறார்.

இயற்பெயர் கேட்கக்கூடாது

இயற்பெயர் கேட்கக்கூடாது

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள பால்புதுமையர் என்ற சொலில் பலவிதமான தரப்பினர் உள்ளனர். 'கே' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வகுப்பினரை தன்பால் ஈர்ப்பாளர் என்றும் ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்கின்றவரைத் திருநங்கை என்றும் பெண்ணாகப் பிறந்து ஆணாக உணர்பவரை திருநம்பி என்று அழைப்பதே சரியானது என்று இந்த ஆணை உறுதி செய்கிறது. ஒருவர் தனது அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சைக்கு 'பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை' எனக் குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதேபோல் ஒருவர் தனது பால் அடையாளத்தை மாற்றிக் கொண்ட பிறகு தனது அடையாளமாகச் சூட்டிக் கொள்ளும் பெயரையே சான்றாக ஏற்க வேண்டும். பிறப்பின்போது வைக்கப்பட்ட பெயரைக் கேட்டுப் பெறுவது அவசியமற்றது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அரசு ரீதியான ஆவணங்களில் இயற்பெயரையே தொடர வேண்டும் என்ற கட்டாயம் தவிர்க்கப்பட்டுள்ளது ஒரு முக்கியமான அம்சம் என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+