உங்க வீட்டில் திடீர்ன்னு மின்சார தடை ஏற்படுகிறதா? கவலையே வேண்டாம்.. உடனே இதை பண்ணுங்க.. முக்கியம்
சென்னை: கோடைகாலத்தில் உங்கள் வீட்டில் மின்சார தடைகள் ஏற்படும் பட்சத்தில் எளிதாக புகார் அளித்து உடனே அதற்கு தீர்வு பெற முடியும்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டு உள்ளது. கிட்டத்தட்ட தினசரி வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை எட்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
வெயில் காலம் காரணமாக மக்கள் பலரும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. அதேபோல் மக்கள் பலரும் வீடுகளில் நாள் முழுக்க ஃபேன் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்துவிட்டது.

முக்கியமாக பலர் புதிதாக ஏசி வாங்குகிறார்கள். அதோடு நாள் முழுக்க ஏசியை ஓட விடுவதும் அதிகரித்துவிட்டது. இதனால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
கடும் வெயில் காரணமாக மக்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக எப்போதும் வெயில் காலத்தில் மின்சார தேவை அதிகரிப்பது போலவே தற்போது மின்சார தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் இதனால் மின் சாதனங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து உள்ளது. 41.30 கோடி யூனிட்கள் என்ற அளவை தாண்டி தமிழ்நாட்டின் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக சென்னையில் வெயில் மண்டையை பிளந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
இதனால் மக்கள் பலர் வீடுகளில் ஏசியை போட்டுவிட்டு மின்சார தேவையை உயர்த்தி உள்ளனர். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து இருந்த போஸ்டில் கூட, சென்னையின் நேற்றைய 15/05/2023 மின் தேவை 3991 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 20/04/2023ல் 3778 MW ஆகும்.
நேற்று சென்னையில் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 21/04/2023 அன்று 84.23 மில்லியன் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

மின்சார தடை: மின்சாரம் தடை படாமல் வழங்கப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தாலும் சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை பட்டது. முக்கியமாக அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 2-3 மணி நேரம் வரை இரவில் மின்சாரம் தடை பட்டது.
பல இடங்களில் 10 மணிக்கு போன மின்சாரம் இரவு 1 மணிக்குத்தான் வந்தது. இந்த மின்சார தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
இது போன்ற மின்சார தடைகள் ஏற்படும் பட்சத்தில் பின்வரும் விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
1. உங்கள் ஏரியாவிற்கான இபி அலுவலக எண் கூகுளில் கிடைக்கும். இந்த நம்பருக்கு போன் செய்யலாம்.
2. மின்னகத்தின் இலவச நம்பருக்கு போன் செய்யலாம்.
3. 9498794987 என்பதுதான் இலவச மின்னக நம்பர் ஆகும். இதற்கு நீங்கள் போன் செய்து சில நிமிடங்கள் காத்திருந்தால் புகார் அளிக்கலாம்.
4. புகார் அளிக்கும் போது உங்களின் பகுதி, தெரு மற்றும் மின்சார இணைப்பு எண் ஆகியவை மிக முக்கியம்.
5. இல்லையென்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான https://twitter.com/TANGEDCO_Offcl பக்கத்தில் நீங்கள் உங்கள் புகார்களை கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications