கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா மாற்றணுமா? 60 நாளில் வாங்க இந்த சுலப வழி தெரியாம போச்சே? செம பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலத்தின் உரிமையாளருக்கு அந்த நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான சான்றிதழ் பட்டா ஆகும்.. ஒரு நிலத்தின் வகை மற்றும் உரிமையாளரின் பயன்பாட்டைப் பொறுத்து இந்த ஆவணம் மாறுபடும்.. இதில் தனிப் பட்டா மற்றும் கூட்டுப் பட்டா என இரு வகைகள் உள்ளன.. இவைகளின் முக்கியத்துவம் என்ன?

கூட்டுப் பட்டா என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களைக் கொண்ட ஆவணமாகும்.. இதில் யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது துல்லியமாகத் தெரியாது.

Patta

கூட்டு பட்டா - தனி பட்டா

மொத்தமாக அனைவரது பெயர்களும் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.. நிலத்தை உட்பிரிவு செய்யாமல் இருக்கும் வரை அது கூட்டுப் பட்டாவாகவே நீடிக்கும்.. ஆனால் தனிப் பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் போன்றவை மிகத் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும்..

ஒரு கூட்டுப் பட்டாவிலிருந்து தனி நபருக்காகப் பிரிக்கப்படும் நில உரிமை ஆவணமே தனிப் பட்டா ஆகும்.. ஒரு நபர் தன்னுடைய நில உரிமையை உறுதி செய்ய மற்றவர்களின் உரிமையிலிருந்து அதனைப் பிரித்துக் கொள்வது அவசியமாகிறது.. இதற்கு அந்த நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும் என்பதோடு, அந்த சொத்தில் தொடர்புடைய மற்ற அனைவரும் இதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

சொத்து ஆவணங்கள்

இது வாரிசு சொத்தாக இருக்கும் பட்சத்தில், வாரிசு சான்றிதழ் அல்லது பாகப்பிரிவினை ஆவணங்கள் இருப்பது அவசியமாகிறது.. தனிப் பட்டாவைப் பெறுவதன் மூலம் நிலத்தின் எல்லைகள் தெளிவாகத் தெரிவதோடு, அதனை விற்பனை செய்வதிலும் அல்லது கடன் பெறுவதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது..

கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப் பட்டாவிற்கு மாற விரும்புவோர் தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் மூலமாகப் பட்டா பிரிப்பு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த விண்ணப்பத்துடன் பழைய பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இதன் பிறகு வருவாய் ஆய்வாளர் மற்றும் சர்வேயர் நிலத்தை நேரில் வந்து அளந்து, உரிமையாளரை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.. வட்டாட்சியர் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு கூட்டுப் பட்டா ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பட்டாக்கள் வழங்கப்படும்.. மற்ற உரிமையாளர்கள் சம்மதிக்காத சூழலில், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே தனிப் பட்டா பெற முடியும்.

விற்பனைச் சான்றிதழ்

தனிப் பட்டா பெறுவதற்குத் இப்போதுள்ள கூட்டுப் பட்டா, விற்பனைச் சான்றிதழ், பகிர்வு உடன்படிக்கை, நில வரைபடம், சொத்து வரி ரசீது, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.. இந்த ஆவணங்களை சரிபார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, நிலத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்றால் 30 முதல் 60 நாட்களுக்குள் தனிப் பட்டா கிடைத்துவிடும்.

ஒருவேளை கூட்டுப் பட்டாவில் பெயரைச் சேர்க்க வேண்டுமென்றால் விற்பனை அல்லது வாரிசு ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.. பெயரை நீக்கம் செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட விடுவிப்பு பத்திரம் அல்லது நீதிமன்ற உத்தரவு கட்டாயம் தேவைப்படும்.. இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+