பிளாட் அப்ரூவல் இருக்கா? வீட்டு மனை வாங்கறீங்களா? அப்ப இதையும் நோட் பண்ணிக்குங்க.. இவ்ளோ இருக்கா?
சென்னை: வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தெரியுமா? புதிதாக வீடு கட்ட வேண்டுமானால் அதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்? பிளாட் அப்ரூவல் என்றால் என்ன தெரியுமா?
புதிதாக வீடு கட்ட வேண்டுமானாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில், ஆல்ட்ரேஷன் செய்வதாக இருந்தாலும், முதலில் திட்ட அனுமதியை பெற வேண்டும்..

அனுமதி முக்கியம்: சென்னை நகர எல்லைக்குள் வீடு கட்டுவதாக இருந்தால் சிஎம்டிஏ என்று சொல்லப்படும் பெரு நகர வளர்ச்சி குழுமத்திடமும், சென்னை அல்லாத தமிழகத்தின் மற்ற இடங்களிலென்றால் டிடிசிபி எனப்படும் நகர திட்ட இயக்ககத்திடமும் அனுமதி பெற வேண்டும்.
சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில், அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இதில் A, B, C என்ற வகைகளில் படிவங்கள் உள்ளன.. இதற்கான விண்ணப்பங்கள் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் அல்லது சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியின் வெப்சைட்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் 3 வகைப்படும்.
ஆவணங்கள்: வீடு கட்டும் மனைப்பிரிவுகளுக்கு "விண்ணப்பம் A" தேவைப்படும்.. இதில், மனைக்குரிய எல்லா ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதேபோல, கட்டிடம் கட்டுவதற்கும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களை கட்ட வேண்டுமானால் இதற்கு விண்ணப்பம் B தேவைப்படும்.இதில், கட்டிடத்தின் லே அவுட் மற்றும் வீட்டை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
மிகப் பெரிய அளவில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொகுப்பு கட்டிடங்களுக்கு விண்ணப்பம் C தேவைப்படும்..
இந்த வகை கட்டடங்களுக்கு சிஎம்டிஏ அமைப்பின் உறுப்பினர் செயலரின் அங்கீகாரம் அளிப்பார்கள். திட்ட அனுமதி, உறுதிமொழிப் படிவத்தையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம்: வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி பெரும்பாலும் விண்ணப்பம் B-தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளர் கையெழுத்து, அல்லது குத்தகைதாரரின் கையெழுத்து, அங்கீகாரம் பெற்ற நில அளவையர் கையெழுத்து, வீட்டைக் கட்டும் என்ஜினியரின் கையெழுத்து, கட்டடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் போன்றவற்றை இணைத்திருக்க வேண்டும்.
வீடு, கடைகள் எது கட்டுவதாக இருந்தாலும் லே-அவுட் கட்டாயம் தேவைப்படும்.. மனையின் லே அவுட்டில் விதிமுறைகள் சரியாக உள்ளதா என்று அதிகாரிகளே நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு, அனுமதி தருவார்கள். இல்லாவிட்டால் அனுமதி கிடைக்காது.
பத்திரப்பதிவு: அதேபோல, பிளாட் அப்ரூவல் என்றால் என்பதையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.. எந்தவொரு இடத்தையும் பதிவு செய்ய வேண்டுமானால், அந்த இடத்துக்கு அப்ரூவல் இருக்க வேண்டும். அப்ரூவல் இல்லாத நிலத்திற்கோ, மனைக்கோ பத்திரம் பதிவு செய்யப்பட மாட்டாது.
ஒரு மனை சரியான இடத்தில் அமைந்திருக்கிறதா, அரசு சேவைகளெல்லாம் கிடைக்குமா, சாலை தூரம் 30 அடி உள்ளதா போன்றவற்றை ஆராய்வதற்கு தேவையானதே பிளாட் அப்ரூவல் ஆகும்.
கரண்ட் வசதி: இந்த பிளாட் அப்ரூவல் இருந்தால்தான், கடன் வசதி, கரண்ட் வசதி போன்றவற்றை எளிதாக பெற முடியும். அப்ரூவல் வாங்க வேண்டுமானால், அந்தந்த நகர் உள்ளாட்சி குழுமத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. உங்களது மனையின் வரி, நகல் பத்திரம், பட்டா, லே அவுட் மற்றும் படிவத்தினை வழங்கி, கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
ஒரு காலியான இடத்திற்கு நிச்சயம் அப்ரூவல் வாங்கிய பிறகே, வீடுகளை அல்லது கடைகளை கட்ட வேண்டும்.. இதற்கு பஞ்சாயத்தில் முறையாக அனுமதியை பெறலாம். ஆனால், கட்டிய விட்டிற்கு அப்ரூவல் மற்றும் அனுமதி பெறுவது கடினம்.. காரணம் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றிதான் வீடுகளை கட்ட வேண்டும். இதற்காகவே அப்ரூவல் மற்றும் அனுமதி தரப்படுகிறது. நகர் ஊரமைப்பு இயக்ககம், பஞ்சாயத்தில் ஆவணங்கள், வரைபடம், அபராதம் போன்றவற்றை சமர்ப்பித்து பெறலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications