Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாய் வளர்க்குறீங்களா.. இனி பதிவு செய்வது கட்டாயம்.. எப்படி ரெஜிஸ்டர் செய்யணும்! கட்டணம் எவ்வளவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வளர்க்கப்படும் நாய்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், அதை ஆன்லைனில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

சென்னையில் சமீபத்தில் 5 வயது சிறுமி ஒருவரை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

How to register your pet dog online in Chennai corporation

குறிப்பாக நாய்களை வளர்ப்போர் கட்டாயம் சென்னை மாநகராட்சியுடன் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

நாய்கள்: நாயை விற்றவரே ரெஜிஸ்டர் செய்ததாக சொன்னாரே.. அதற்கான சான்றிதழும் இருக்கிறதே என நீங்கள் சொல்லலாம்.. ஆனநால் சொன்னால் அது அது வேறு.. அது அவர் கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்தது. இது பொதுவாக நாய்கள் ப்யூரர் ப்ரீட்டா என்பதை கண்டறிய வழங்கப்படும். இதில் ஒரு நாய்க் குட்டி எந்தளவுக்கு ப்யூர் ப்ரீட் என்பதை மட்டும் ஆய்வு செய்து தருவார்கள். நாயின் தாய்- தந்தை, தாத்தா- பாட்டி என மொத்தம் 3 தலைமுறையின் பெயர்கள் அந்த சான்றிதழில் இருக்கும். இதை வைத்தே நீங்கள் வாங்கும் நாய் ப்யூர் ப்ரீட் என்பது உறுதி செய்யலாம்.

இது வேறு.. நாய்களை வளர்க்க உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியிடம் பதிவு செய்வது வேறு.. திரு.வி.க. நகரில் உள்ள கால்நடை மையம், நுங்கம்பாக்கம் கால்நடை மையம், கண்ணம்மாபேட்டை கால்நடை மையம், மண்டலம் உள்ளிட்ட இடங்களில் நீங்கள் இந்த சான்றிதழைப் பெறலாம். மேலும், ஆன்லைனிலும் கூட நீங்கள் இந்த சான்றிதழைப் பெறலாம்.

கட்டணம் எவ்வளவு: இதற்கு நீங்கள் 50 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு முறை மட்டுமே வாங்கிவிட்டால் போதாது.. ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் இதை ரூ.50 செலுத்திப் புதுப்பிக்க வேண்டும்.. அதையும் நீங்கள் ஆன்லைனிலையே செய்து கொள்ளலாம். பொதுவாக உரிமம் பெற்றால் வளர்ப்புப் பிராணிகளின் கழிவுகளை அகற்றுவது, இனப்பெருக்கம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதிக்கப்படும்.

பொதுவாகச் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வளர்த்தாலும் நீங்கள் கட்டாயம் வளர்ப்புப் பிராணியைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், நடைமுறையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வரை இது தொடர்பாக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், இந்த சென்னை சம்பவத்திற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி நாய்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி உள்ளது. ஆன்லைனிலையே அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.

ஆன்லைனில் செய்வது எப்படி: முதலில் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.. அதில் ஆன்லைன் சர்வீஸ் என்பதை க்ளிக் செய்யவும். அதில் pet animal licence என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்யவும். உள்ளே நியூ யூசர் என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு இருப்பார்கள். அதைப் டைப் செய்யுங்கள். மேலும், மொபைல் நம்பர், மெயில் ஐடியையும் கேட்பார்கள். அதை என்டர் செய்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.. அதை என்டர் செய்தால் உங்கள் கணக்கு ஓபன் ஆகிவிடும்.

பிறகு லாகின் செய்தால், இடது பக்கம் New Pet Registration என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் செல்லப்பிராணியின் பெயர், ப்ரீட், அடையாளக் குறி, நிறம் பாலினம், வயது, செல்லப்பிராணிக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளதா, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதா, எந்த கால்நடை மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்பது குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். மேலும், உங்கள் போட்டோ, நாயின் போட்டோ, உங்கள் அட்ரஸ் ப்ரூப், நாயின் வேக்சினஷன் சான்றிதழை நீங்கள் அதில் அப்லோட் செய்ய வேண்டும். பிறகு கட்டணம் செலுத்தினால் உரிமம் கிடைத்துவிடும்.

பூனைகளையும் பதிவு செயய்ணும்: மேலும், உங்களிடம் எத்தனை நாய்கள் இருந்தாலும் இதிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.. மேலும், நாய்களுக்கு எப்போது உரிமம் காலாவதி ஆகிறது என்பதைப் பார்த்துப் புதுப்பித்தும் கொள்ளலாம். வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும் நீங்கள் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+