சீறும் இந்தியா.. சினம் கொண்ட பாக்! அணு ஆயுத தாக்குதல் நடந்தால் எப்படி தப்பிக்கனும்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்திருக்கிறது. இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருப்பதால், இதை கொண்டு தாக்குதல் நடத்தினால் பேரழிவு ஏற்படும். இதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
ஏற்கெனவே ஹீரோஷிமா, நாகாசாகி என இரண்டு அணு ஆயுத தாக்குதலை இந்த உலகம் கண்டிருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அது மொத்த உலகத்தையும் அழித்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ஓரிடத்தில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால், அதிலிருந்து எப்படி தப்பிப்பது என அமெரிக்க ரெட் கிராஸ் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குண்டு விழுந்த இடத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு போக வேண்டும். இதுதான் உயிர்பிழைக்க நமக்கு இருக்கும் ஒரே வழி. 'டேட்டஸுரு சுதோமு யமாகுச்சி' என்கிற ஜப்பானிய நபர் ஹீரோஷிமா, நாகாசாகி என இரண்டு அணு ஆயுத தாக்குதலிலும் உயிர் பிழைத்திருக்கிறார். இப்படி உயிர் பிழைத்த ஒரே நபர் இவர்தான்.
இவர் உயிரை காப்பாற்றியது தூரம்தான். அதாவது இவர் முதலில் ஹிரோஷிமாவில் வணிக வேலைக்காக சென்றிருக்கிறார். அங்கு குண்டு வீசப்பட்டிருக்கிறது. உடனடியாக இவர் அங்கிருந்து தப்பியுள்ளார். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து விலகி சென்றிருக்கிறார். லேசான காயம் இருந்தாலும் உயிர் பிழைத்துவிட்டார். அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகாசாகிக்கு போயிருக்கிறார். சோகம் என்னவெனில் அங்கும் அணு குண்டு வீசப்பட்டிருக்கிறது. பின்னர் அங்கிருந்தும் தப்பி சென்றிருக்கிறார்.
இரண்டு தாக்குதலிலிருந்தும் இவர் உயிர் பிழைக்க காரணம் பாதுகாப்பான தூரத்தில் இருந்ததுதான். எனவே குண்டு விழுந்த இடத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சென்றுவிடுங்கள்.
அடுத்து பதுங்கு குழிக்குள் தஞ்சமடைய வேண்டும். தடிமனான சுவர்கள், புத்தக அடுக்குகள், மண் இவையெல்லாம் குண்டு வீச்சின் அதிர்விலிருந்து உங்களை காப்பாற்றும். அதேபோல அணு குண்டின் கதிர் வீச்சையும் இது குறைக்கும் தன்மை கொண்டது. எனவே அணு வீசப்படுகிறது என்று சைரன் ஒலித்தால் உடனடியாக பதுங்கு குழிக்குள் புகுந்துவிடுங்கள்.
அப்படி செய்யும்போது வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டும். சில நாட்களுக்கு தேவையான உணவு. அதாவது பிரட், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் பாட்டில், டார்ச் லைட், ரேடியோ உள்ளிட்டவற்றை கையில் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் அணு கதிர்வீச்சின் தாக்கம் பல நாட்களுக்கு நீடிக்கும். நிலைமை ஓரளவு சீரான பிறகு ரேடியோ மூலமாக அறிவிப்பு வெளியாகும். அரசு மக்களை வெளியே வர அழைப்பு விடுக்கும். அந்த நேரத்தில் மக்கள் வெளியில் வர வேண்டும்.
இந்த தகவல்களை தெரிந்துக்கொள்ள ரேடியோ முக்கியமானது. என்ன இருந்தாலும் அணு குண்டு வெடிப்பு நடந்த 2 வாரங்களுக்கு வெளியே வரவே கூடாது. 2 வாரங்களுக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதீர்வீச்சின் தீவிரம் குறைய தொடங்கும்.
பள்ளிகள், மருத்துவமனைகள், வீட்டின் பேஸ்மென்ட் உள்ளிட்டவை பதுங்கிக்கொள்ள சரியான இடங்களாகும். ஏனெனில் போர் காலங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது எதிரிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications