அன்று இன்டர்வியூவில் சொன்னாரே.. உதயநிதி "ஆசையை" நிறைவேற்றிய ஸ்டாலின்.. சேப்பாக்க போட்டி பின்னணி!
சென்னை: திமுக சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்.. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இவர் சேப்பாக்கம் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக கட்சி தனது கூட்டணியை இறுதி செய்து உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த இடங்களை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 173 இடங்களில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.
திமுகவின் உதய சூரியன் சின்னம் இந்த தேர்தலில் 187 இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் திமுகவின் 173 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

திமுக வேட்பாளர்
திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு தயாரித்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பட்டியலை கோபாலபுரத்திற்கு கொண்டு சென்றார்.வேட்பாளர் பட்டியலை கருணாநிதி படத்திற்கு முன்பு வைத்து ஆசி பெற்றார். அதன்பின் தயாளு அம்மாளிடம் கொடுத்து ஆசி பெற்றார். மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், கருணாநிதி நினைவிடத்திலும் வேட்பாளர் பட்டியலை வைத்து ஆசி பெற்றார்.

ஸ்டாலின்
இதன் பின் திமுக வேட்பாளர்கள் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார். திமுக வெளியிட்டு இருக்கும் பட்டியலில் வலுவான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக திமுகவில் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம்
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கான வேட்பாளர் நேர்காணலில் இவர் கலந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் போட்டியிட சேப்பாக்கம் தொகுதியில் விரும்புகிறார் என்று நிறைய செய்திகள் வந்த நிலையில் அவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விருப்பம்
உதயநிதியின் வருகையை ஸ்டாலின் விரும்பவில்லை, திமுக மூத்த உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் தற்போது உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லை. இந்த நிலையில் கடைசி நேரத்தில்தான் உதயநிதி நேர்காணலில் கலந்து கொண்டார்.

நேர்காணல்
இந்த நேர்காணலிலேயே உதயநிதியின் தேர்வு உறுதி செய்யப்பட்டுவிட்டது. அப்போதே நீங்கள்தான் சேப்பாக்கம் வேட்பாளர்.. போய் வேலையை பாருங்கள்.. என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துவிட்டார். ஆனால் ஸ்டாலின் முறையாக அறிவிக்க வேண்டும் என்று உதயநிதி காத்து இருந்தார். தற்போது உதயநிதியின் கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
-
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications