‛என் உயிரை காப்பாற்றியதே அவர்தான்’.. விஜயகாந்தை நினைத்து கலங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. டிசம்பர் சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு டிசம்பர் மாதத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது சூட்டிங்கை நிறுத்தி நடிகர் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கண்கலங்கி கூறியுள்ளார்.

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது.

How Vijayakanth helped to actor Srikanth who battled for life on december

இன்று காலை முதல் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது. மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உடல் அடக்கத்தில் முக்கிய பிரமுகர்கள், விஜயகாந்தின் குடும்பத்தினர் என மொத்தம் 200 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வாடிய முகம்-கண்ணில் தெரிந்த சோகம்.. சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்தை மறக்காத விஜய்.. நேரில் அஞ்சலி

இந்நிலையில் தான் தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் விஜயகாந்த் குறித்து உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: கேப்டனை இழந்து வாடும் அவரது மனைவி, 2 மகன்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். விஜயகாந்தை ஏன் சினிமாவில் அனைவரும் கேப்டன் என அழைக்கிறார்கள் என என்னிடம் நிறையபேர் கேள்விகள் கேட்டுள்ளனர். உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களுக்காக இருப்பவர் தான் விஜயகாந்த். அனைவரின் மனதில் இடம்பிடித்தவர் தான் கேப்டன். வீட்டுக்கு சென்றால் சாப்பாடு போடாமல் யாரையும் அனுப்பமாட்டார்.

மிஸ் யூ கேப்டன்.. விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்.. தொலைபேசி மூலம் பிரேமலதாவிடம் இரங்கல்

யாருக்காவது மருத்துவ உதவி என்று சென்றால் கேப்டன் தான் முதலில் உதவி செய்வார். இதே டிசம்பர் மாதம் தான் நான் ஒருமுறை உயிருக்கு போராடி கொண்டிருந்தேன். அப்போது சூட்டிங்கில் இருந்த விஜயகாந்த் கேமராமேனை அழைத்து, ‛‛அந்த தம்பி காசு வைத்திருப்பானா என தெரியவில்லை. மருத்துவமனைக்கு சென்று ஆபரேஷனுக்கு உதவி செய்யுங்கள். விமானத்தில் அழைத்து கூட சிகிச்சை அளியுங்கள்’’ என கூறினார். அவரது சூட்டிங்கை நிறுத்திவிட்டு நான் எப்படி இருக்கிறேன் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் தெரிந்து கொள்ள யோசித்தார்.

அனைத்து நடிகர்களுக்காக எப்போதும் அவர் நின்றுள்ளார். சினிமா, அரசியலுக்கு அவர் முன்னுதாரணமாக இருந்தார். நடிகர் சங்கத்துக்கு பெயர் வைக்கும்போது அரசியல் செய்யாமல் விஜயகாந்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டவர் அவர்’’ எனக்கூறி கண்கலங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+