"காமக்கொடூரம்".. பானிபூரி கடையிலே..13 வயது மொட்டை "கருக்கிய" 4 பேர்! விடாமல் வீடியோ எடுத்த 3 பெண்கள்
சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் வாக்குமூலம் தந்துள்ளனர்
சென்னை: பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்த 3 மாணவிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவி.. 13 வயதுதான் ஆகிறது.. சிறுமி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவியின் பெற்றோர் பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டனர். இதனால், மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.

கிளாஸ் டீச்சர்
இந்நிலையில், கடந்த வாரம் மாணவி ஸ்கூலுக்கு போகவில்லை... இதனால் கிளாஸ் டீச்சர், பாட்டியிடம் விசாரித்துள்ளார்... அதற்கு அந்த பாட்டி, தினமும் ஸ்கூலில் இருந்து வரும்போது சோர்வாக இருக்கிறாள் என்று பாட்டி சொல்லி உள்ளார்.. இதனால் கிளாஸ்டீச்சர், சந்தேகமடைந்து அந்த மாணவியை தனியாக கூப்பிட்டு விசாரித்திருக்கிறார்.. அப்போதுதான் மாணவி கதறி கதறி அழுதுள்ளார்.. தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஒன்றுவிடாமல் சொல்லி உள்ளார்.

போலீஸ்
இதை கேட்டு டீச்சர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக பாட்டியை அழைத்து பேசியுள்ளார்.. இதற்கு பிறகு, டீச்சரும், பாட்டியும் சேர்ந்து மாணவியுடன் வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகனை சந்தித்து புகார் அளித்தள்ளனர்.. அவர்களோ, வடபழனி மகளிர் போலீசுக்கு புகாரை தரும்படி சொல்லவும் அங்கு தந்துள்ளனர்.. மகளிர் போலீசாரும் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.. முதல் விஷயமாக, மாணவியை காதலிப்பதாக சொல்லி வசந்த் கிரிஷ் என்ற மாணவர் காதல் என்ற பெயரில் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது.

தனி அப்பார்ட்மென்ட்
நாகர்கோவிலை சேர்ந்தவர் வசந்த்கிரிஷ்.. 20 வயதாகிறது.. ராமாபுரம் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிறார்.. பணக்கார வீட்டு பிள்ளை.. ராமாபுரம் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் தனியாகவே வீடு எடுத்து தங்கி உள்ளார்.. வார இறுதி நாட்களில் பப்பு, பண்ணை வீடுகளுக்கு சென்று ஜாலியாக இருந்து வருவார்.. அப்போதெல்லாம் பள்ளிமாணவியையும் அழைத்து சென்றுவிடுவார்.. தன்னுடைய அப்பார்ட்மென்ட்டிற்கு விடிகாலை 3 மணிக்கு அந்த மாணவியை அழைத்து வருவார்..

விடிகாலை பலாத்காரம்
ஏற்கனவே போதையில் உள்ள மாணவியால் மறுநாள் காலை எழுந்து கொள்ள முடியாமல், பள்ளிக்கு சரியாக போக முடியாமல் போயுள்ளது. அடுத்ததாக, மாணவிக்கு ஹூக்கா என்ற போதை பொருள் தினமும் தரப்பட்டுள்ளது.. அடுத்ததாக, தன்னுடைய நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்கி உள்ளார் வசந்த்.. பிறகு, இவர்கள் மொத்தமாகவும் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் சிறுமியிடம் ஈடுபட்டு வந்துள்ளனர்..

4 இளைஞர்கள்
சிறுமியை சீரழித்த வசந்த் கிரிஷ் என்பவருடன் சேர்த்து அந்த 4 பேருமே கைதாகி உள்ளனர்.. சிவகாசி அலமத்துபெத்தி ரோடு சுப்பிரமணிய கோயில் தெருவை சேர்ந்த சினிமா துணை நடிகர் பால சிவாஜி(எ) ரஞ்சித்(25), சென்னை கொளப்பாக்கம் கதிரவன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் விஷால்(20), நங்கநல்லூர் 6வது மெயின் ரோடு நித்யா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகிய 4 பேரும் போக்சோவில் கைதாகி உள்ளனர். 4 பேரிடம் விசாரணை நடந்தது.. அவர்கள் நடந்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:

வாக்குமூலம்
"வசந்தின் கல்லூரி நண்பன் விஷால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி படிக்கும் பள்ளியில் படித்து வரும் இன்னொரு மாணவியை காதலித்து வருகிறார். இதனால் தினமும் விஷால், காதலியை பார்க்க பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு வருவது வழக்கம். அப்போது மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷூம் உடன் வருவான். அப்போது அதே கடைக்கு பள்ளி மாணவியும் வருவார். அந்த பள்ளி மாணவியை பார்த்த வசந்த் கிரிஷ், அவருடன் நெருக்கமாக இருக்க உதவுமாறு விஷாலிடம் கேட்டுள்ளார்.. அதற்கு அவர், எனது காதலியின் மூலம் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன் என்று உறுதியும் தந்துள்ளார்.. அதற்கு பிறகு, விஷாலின் காதலி, பள்ளி மாணவியை பானிபூரி சாப்பிட அழைத்து வந்துள்ளார்.

நெருக்கம்
அதன்படி வசந்த் கிரிஷ் ஒன்றுமே தெரியாதபடி பள்ளி மாணவியுடன் நெருக்கம் ஏற்படுத்தி, அதன் மூலம் செல்போன் நம்பர் வாங்கி பழக ஆரம்பித்துள்ளார்.. வசந்த்துக்கும், விஷாலுக்கும் கஞ்சா, ஹூக்கா என்ற போதை பொருள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அதேநேரம் விஷாலுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவி, அவரது தோழியான இன்னொரு மாணவி ஆகியோருடன் வசந்த் கிரிஷூக்கு ஹூக்கா என்ற போதை பொருள் பயன்படுத்தும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே வசந்தின் அப்பார்ட்மென்ட்டில் வார இறுதி நாட்களில் எப்போதுமே குடியும் கூத்துமாக இருப்பார்களாம்..

துணை நடிகர்
ஒருநாள், விஷால் காதலி மூலம் பள்ளி மாணவியை வசந்த், தன்னுடைய அப்பார்ட்மென்ட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.. 2 கல்லூரி மாணவிகளை வசந்த் கிரிஷ் அறிமுகம் செய்து வைத்துள்ளார்... பிறகு மாணவிக்கு ஹூக்கா போதை பொருளை தோழிகள் மூலம் கொடுத்து அவரை வசந்த், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு பிறகு மாணவி போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. பிறகு ஒரு கட்டத்தில் தனது நண்பர்களான கல்லூரி மாணவன் விஷால், துணை நடிகர் ரஞ்சித், பேராசிரியர் பிரசன்னா ஆகியோரும் பள்ளி மாணவிக்கு ஹூக்கா தந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாணவிகள்
அந்த வகையில் கடந்த 1 மாதமாக பள்ளி மாணவியை 3 தோழிகள் உதவியுடன் 4 இளைஞர்களும் சீரழித்து வந்துள்ளனர். பள்ளி மாணவியை ஆண் நண்பர்கள் கூட்டு பலாத்காரம் செய்யும்போது, 3 மாணவிகளும் செல்போனில் வீடியோ எடுப்பார்களாம்.. அந்த வீடியோவை காட்டி மறுபடியும் மறுபடியும் 4 பேரும் சீரழிப்பார்களாம்.. மாணவியின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை.. அவர் இரவு 10 மணிக்கே மாத்திரை போட்டு தூங்கிவிடுவாராம்.. அதனால், பாட்டி தூங்கிய பிறகு போன் செய்து வீட்டில் உள்ள மாணவியை காரில் அழைத்து வந்து ஜாலியாக இருப்பாராம்..

அதிர்ச்சி சம்பவம்
விடிகாலை 4, 5 மணிக்கு கொண்டு வந்து மறுபடியும் வீட்டில் விட்டுவிடுவார்கள்.. சில நேரங்களில் பாட்டி வீட்டில் இல்லாதபோது, வீடுபுகுந்து 4 பேரும் மாணவியை சீரழித்துள்ளனர்.. இப்படியே வாரம் 4 நாட்கள் மாணவியை உடல் ரீதியாக பலவீனப்படுத்தியுள்ளனர். இப்போது, இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த 3 மாணவிகள் மாயமாகி உள்ளனர்.. அவர்கள் செல்போனும் ஸ்விட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளது.. இருந்தாலும் அவர்களை கைது செய்ய போலீசார் மும்முரமாகி உள்ளனர்..

வீடியோ
பள்ளி மாணவிக்கு 15 வயது மற்றும் 2 கல்லூரி மாணவிகளுக்கு 19 வயது என்பதால் போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று கவனமாக இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர்... ரகசியமான முறையில்தான் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. எல்லாருமே மாணவ, மாணவிகள் என்பதால், ஜாக்கிரதையா விசாரணையை கையாண்டு வருகின்றனர் போலீசார்.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. தலைநகரில் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ள நிலையில், பெற்றோர்களும், பொதுமக்களும் தலையில் கை வைத்து கொண்டு அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர்..!












Click it and Unblock the Notifications