இந்தி திணிப்பு! நாடாளுமன்ற எம்பி சீட் குறைப்பு! இக்கட்டான நேரத்தில் எடப்பாடி பெரிய ரிஸ்க்! இடிக்குதே
சென்னை: நாடாளுமன்ற எம்பி சீட் குறைப்பு விவகாரம்.. இந்தி திணிப்பு விவகாரம் உச்சத்தில் இருக்கும் போது எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் எடப்பாடி எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் ஆக இது பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

இந்தியாவில் தற்போது மொழி பிரச்சனை உச்சத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு பற்ற வைத்த இந்த மொழிப்போர் தீ சர்வதேச அளவில் பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பெரிய பிரச்சனை
இப்படி ஒரு பக்கம் இந்தி மொழி திணிப்பு டிரெண்டாகி வருகிறது. இன்னொரு பக்கம் தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.
மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல மாநில தலைவர்கள் கூட்டம் கூட சென்னையில் நடந்தது.
எடப்பாடி ரிஸ்க்
நாடாளுமன்ற எம்பி சீட் குறைப்பு விவகாரம்.. இந்தி திணிப்பு விவகாரம் உச்சத்தில் இருக்கும் போது எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் எடப்பாடி எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் ஆக இது பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இது அதிமுகவிற்கு பெரிய அடையாள பிரச்னையை கொடுக்கலாம். இந்தி திணிப்பை எதிர்த்துக்கொண்டே கூட்டணியில் நீடிக்க முடியாது. கூட்டணியை உருவாக்க முடியாது. நாடாளுமன்ற எம்பி சீட்டுகளை இழக்கவும் அதிமுக ஒப்புக்கொள்ள முடியாது. இது தமிழ்நாட்டில் அவர்களுக்கு எதிராக திரும்பும். இந்த சிக்கலை.. எடப்பாடி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications