மகளிர் உரிமைத் தொகை.. இந்த முறை உங்களுக்கு ரூ.1000 வரவில்லைன்னா.. இதை பண்ணுங்க.. பணம் வரும்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒருவேளை நீங்கள் இந்த முறை விண்ணப்பம் செய்து.. பணம் வரவில்லை என்றால்..எளிதாக நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். அதன் மூலம் நீங்கள் பணமும் பெற முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பம் மறுக்கப்பட்டிருந்தால், அதற்கான முழுமையான நடைமுறையை அரசு வெளியிட்டுள்ளது.

எப்படி மேல்முறையீடு செய்வது?
நீங்கள் உங்கள் மேல்முறையீடு மனுக்கள் உங்கள் உள்ளூர் கிராம, நகர் அலுவலர்களிடம் கொடுக்கலாம். அல்லது மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். இதன் பின் மேல்முறையீட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரின் சீராய்வுக்கு அனுப்பப்படும். அதிகாரிகள் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். சிறுபிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகளால் தகுதியான பெண்கள் யாரும் விடுபடாமலிருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக, இ-சேவை மையங்கள் மூலமாகவும் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாத பெண்கள், தங்கள் அருகிலுள்ள மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழக அரசின் முக்கிய நலத்திட்டம். இந்த மேல்முறையீட்டு அமைப்பு, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் திட்டப் பலனைச் சிரமமின்றி பெறுவதை உறுதி செய்கிறது. விண்ணப்ப நிலை குறித்த முக்கிய குறுஞ்செய்திகளைத் தவறவிடாமல் இருக்க, கைபேசி எண்களை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை - மேல்முறையீடு
விண்ணப்பித்த அனைவருக்கும், விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டு தற்போது பணம் அனுப்பப்பட்டுவிட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் குறுஞ்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்படும். இது, விண்ணப்பதாரர்கள் குறைகளை அறிந்து, மேல்முறையீடு செய்வதற்கு முன் சரிசெய்ய உதவும்.
மேல்முறையீடு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதி மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டைச் செய்ய வேண்டும். நிராகரிப்புச் செய்தியுடன் சென்று, அதிகாரியின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications