வாகன ஓட்டிகளே.. பைக், டாக்ஸிகள் இயங்க தடை உத்தரவு.. மீறினால் 10,000 அபராதம்: வழிகாட்டுதல் வெளியாகுதா
சென்னை: பைக் டாக்சிகளின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக வாகன போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
சென்னையில் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி மிகவும் பிரபலமாகி உள்ளது.

பஸ் ஸ்டாண்டுகள், ரெயில்வே ஸ்டேஷன்கள், ஏர்போர்ட்கள் போன்ற இடங்களில் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. இப்போது ரேபிடோ பைக் வசதியும் தரப்பட்டு வருகிறது.
கஸ்டமர்கள்: அதன்படி, வாடிக்கையாளர்களை பைக்கில் வந்து அவர்கள் செல்லும் இடத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.. இதற்கும் குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது... ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால், நிறைய பேர் இந்த 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த துவங்கி உள்ளனர். அதுவும் இல்லாமல், இதற்கு காலம் நேரம் எதுவும் கிடையாது.. அதிகாலை முதல் இரவு வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வசதி உள்ளதால், பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்படி இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளதால், ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு இது பெருத்த பாதிப்பை உண்டுபண்ணி வருகிறது.. இதனால் ரேபிடோ பைக் வசதியை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தினர்.
பைக் வசதி: மேலும், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனுவும் தரப்பட்டுள்ளது.. இதெல்லாம் மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமானது, பயணிகளுக்கு பாதுகாப்பற்றது என்று வலியுறுத்தி, இந்த ரேபிடோ பைக் வசதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.. 5 நாட்களுக்குள் 'ரேபிடோ' பைக் வசதியை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
சென்னை எழிலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினருடன், போக்குவரத்துத் துறை ஆணையர் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது ஆணையர் கூறியதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்ததாவது: பைக் டாக்சிகளை அனுமதிக்கவும், தடுக்கவும் சட்டமில்லை. அதே நேரம், சொந்தபயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக நோக்கில் ஈடுபடுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது. அதன் அடிப்படையில் பைக் டாக்சி இயக்குவோரிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
பறிமுதல் பைக்குகள்: இதுவரை சென்னையில் 26 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவன பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தி, வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை பைக்டாக்சிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். 5 நாட்களுக்குள் முழுமையாக பைக் டாக்சிகள் நிறுத்தப்படும். இவ்வாறுஆணையர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் தரப்பில், "5 நாட்களுக்குள் பைக் டாக்சி இயக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த தவறினால் அவர்களை பிடித்து வந்து வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம்'' என்றனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications