ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அறிவிப்பு.. இனி "இந்த" பொருள் ரேஷனில் கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.. இது தொடர்பாக விளக்கமும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, 2020ம் ஆண்டில், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. அப்போது, ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் அவதிப்பட்டனர்.. பலர் பட்டினியால் வாடினர்.
இதே போல வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் இலவச ரேஷன் உணவு பொருட்களை கூட பெற முடியாமல் அவதி அடைந்தனர்... இதனால் மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது..

எங்கும் வாங்கலாம்: இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எங்கும் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தங்களது சொந்த மாநிலத்தை விட்டு பிற பகுதிகளில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்..
அதாவது, கிலோ கோதுமை, 2 ரூபாய்க்கும், கிலோ அரிசி, 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. அவர்கள், மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானால் வாங்கி கொள்ளலாம். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
திடீர் நிறுத்தம்: அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் துவங்கப்பட உள்ளது. இதற்காக வீடு தோறும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் வாயிலாக 20ம் தேதி முதல் விரல் ரேகைப் பதிவு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.. எனவே, இதனால், ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கு பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான்,ஒ ரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு: கலைஞர் மகளிர் உதவித் தொகைக்கான கணக்கெடுப்பு நிறைவு பெற்றபிறகு, மறுபடியும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழக கார்டுதாரர்களும், முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications