ஊருக்கு போகணுமா? ரயில்ல போறீங்களா? இனி டிக்கெட்டுக்கு அவ்ளோ காசு வேணாம்.. ரயில்வேயின் "மெகா ஜாக்பாட்"
சென்னை: ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக, இந்தியன் ரயில்வே ஒரு முக்கியமான சலுகைகளை வெளியிட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்தியன் ரயில்வே ஏராளமான வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.. அத்துடன், சில அட்வைஸ்களையும் அவ்வப்போது பயணிகளுக்கு தந்து வருகிறது.
காரணம், ரயிலில் பயணம் மேற்கொள்வதற்காக, முன்பதிவுக்காக ஐஆர்சிடிசி வெப்சைட் மற்றும் செயலியை பயணிகள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஐஆர்சிடிசி செயலிகளை செல்போனில் டவுன்லோடு செய்வதில், மோசடிகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது..

பயணிகள்: ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில், போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து, அதன்மூலம் பயணிகளிடம் பணத்தை சிலர் பறித்துவிடுகிறார்களாம் இதற்குதான், ஏற்கனவே, ரயில்வே துறை வார்னிங் தந்துகொண்டேயிருக்கிறது.
ப்ளே ஸ்டோர்: ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற பெயரிலான செயலியை கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தில் ஆப் ஸ்டோர் ஆகிய இடங்களில் நேரடியாக சரிபார்த்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என்றும், முன்பதிவு அவசரத்தில் மூன்றாம் நபர்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் இணைப்புகளை நம்பி, டவுன்லோடு செய்யக்கூடாது, ஐஆர்சிடிசி செயலியை தரவிறக்கம் செய்வதில் பொதுமக்கள் எப்போதுமே கவனமாக செயல்பட வேண்டும்" என்றும் அறிவுறுத்தியவாறே உள்ளது.
சலுகைகள்: அதேபோல, சில சலுகைகளையும் இந்தியன் ரயில்வே அடிக்கடி வெளியிட்டு, பயணிகளுக்ககு இன்ப அதிர்ச்சியை தந்துவிடுகிறது.. ஆம், ஒருகுறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையை தந்து வருகிறது. இப்போதும், அப்படித்தான் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
"பிறரின் துணையுடன் மட்டுமே பயணிக்கக்கூடிய மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் முற்றிலும் பார்வையற்ற பயணிகளுக்கு பொது வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் 3 ஏசியில் 75 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.. இவர்களுக்கு AC முதல் வகுப்பு, AC இரண்டாம் வகுப்பில் டிக்கெட் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஆவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும், ராஜதானி. சதாப்தி போன்ற ரயில்களில், 3 AC மற்றும் AC நாற்காலி இருக்கைக்கு 25 சதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
இதே போல் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத நபர்களுக்கு ரயில் டிக்கெட்களில் 50 சதவீத தள்ளுபடியும், இவர்களுடன் பயணிக்கும் துணை நபர்களுக்கும் இதே போன்ற தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. இது தவிர, அத்தகைய பயணிகளுடன் பயணிக்கும் நபர்களுக்கும் (எஸ்கார்ட்) ரயில் டிக்கெட்டுகளில் அதே தள்ளுபடியின் பலன் கிடைக்கும்.
சலுகைகள்: புற்றுநோய், தலசீமியா, இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், காச நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், அனிமீயா எனப்படும் ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications