இதெல்லாம் காங்கிரசில்தான் நடக்கும்! ஜார்க்கண்ட் தேர்தலால்.. தமிழக எம்பிக்களுக்கு.. வந்த புது சிக்கல்
சென்னை: 2024 ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 13 முதல் 20 நவம்பர் 2024 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இந்த ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாம். இதற்காக தமிழக எம்பிக்கள் சிலர் பணிகளை செய்ய.. பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாம். "சிலரது" எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருப்பதால், என்ன செய்வது என காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் யோசிக்கிறார்களாம். காங்கிரஸில் நடக்கும் இந்த மோதல்தான் தற்போது ஹை-லைட் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருக்கிறார் அஜோய் குமார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார் அஜோய் குமார்.. தமிழக காங்கிரசில் நடக்கும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் இப்போது வரை அஜோய் குமா வழியாகத்தான் காங்கிரஸ் மேலிடம் விசாரித்து வருகிறது.

அந்த வகையில், மேலிட பொறுப்பாளரின் ஆசியை பெற காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் விரும்புவது இயல்பான விசயம். இது காலம்காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். அதாவது, மேலிட பொறுப்பாளர்களாக யார் வருகிறார்களோ அவர்களை வளைத்துப்பிடித்துக்கொள்வார்கள்.
அதனால், மேலிட பொறுப்பாளர்களின் காட்டில் எப்போதும் மழை பொழிந்து கொண்டிருக்கும். இந்த நிலையில், தமிழக காங்கிரசின் தற்போதைய மேலிட பொறுப்பாளரான அஜோய்குமார், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார்.
2024 ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 13 முதல் 20 நவம்பர் 2024 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி ஜார்க்கண்ட் சட்டப் பேரவையின் அனைத்து 81 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 23 நவம்பர் அன்று அறிவிக்கப்படும். ஹேமந்த் சோரன் தற்போதைய முதல்வராக இருக்கிறார்.
2019ல் ஜார்கண்டில் நடந்த தேர்தலில்.. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது. இதில் ஹேமந்த் சோரன் முதல்வரானார். இந்த தேர்தலில் மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து உள்ளன. பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இதற்காக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, காங்கிரஸ் மூத்த ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து ஏற்கனவே பேசிவிட்டாராம். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.பி. க்களிடம், ''ஜார்கண்ட் தேர்தலில் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும். தேர்தலில் ஜெயித்து விடுவேன். அப்படி ஜெயித்துவிட்டால் நான்தான் துணை முதல்வர். அப்போது உங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வேன். அதனால், இப்போது எனக்கு நீங்கள் தேர்தல் செலவு உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் உதவி செய்ய வேண்டும்'' என அஜோய் குமார் கோரிக்கை வைத்துள்ளாராம்.
அவரது எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருப்பதால், என்ன செய்வது என எம்.பி.க்கள் பலரும் யோசிக்கிறார்களாம். அஜோய் குமாரின் எதிர்பார்ப்புதான் காங்கிரஸில் நடக்கும் சீக்ரெட் ஹை-லைட்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications