Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம்பு கடிச்சது எது? 3 நாகப்பாம்புகளுடன் அரசு மருத்துவமனைக்கு வந்த நபர்! டாக்டர் என்ன ஆனார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்புகள் நடமாட்டம் தற்போது குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில், பாம்பு கடித்து பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளது.. இந்நிலையில் பீகார் சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது கவுதம் குமாருக்கு?

2 நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தி இருந்தது.. அதாவது தீபக் என்ற இ-ரிக்ஷா டிரைவரை பாம்பு கடித்துவிட்டது.. உடனடி சிகிச்சை வேண்டும் என்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தீபக் வந்தார்.

Snakebite Cobras Government Hospital

உத்தர பிரதேசம் நபர்

அதுவும் எப்படி வந்தார் தெரியுமா? தன்னை கடித்த உயிருள்ள பாம்பை தன்னுடைய சட்டை ஜாக்கெட்டின் உட்புறப் பையில் வைத்து கொண்டு மருத்துவனைக்கு எடுத்து வந்திருந்தார்..

தன்னை பாம்பு கடித்துவிட்டது என்று மருத்துவமனையில் ஒருவரிடம் தீபக் சொன்னார்.. அதற்கு அந்த நபர், அந்த பாம்பு எங்கே இருக்கிறது? என்று கேட்கவும், திடீரென தனது ஜாக்கெட்டின் ஜிப்பைத் திறந்து பாம்பை வெளியே எடுத்து காட்டினார்.. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறி ஓடினார்கள்.. இது தொடர்பான வீடியோவும் 2 நாட்களாகவே வலம் வந்தவாறு உள்ளது..

பீகார் 3 நாகப்பாம்புகள்

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மற்றொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம், ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் குமார்... இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பாம்புகள் புகுந்துள்ளதாக கவுதமுக்கு தகவல் கிடைத்துள்ளது.. உடனே கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று, பாம்புகளை தேடினார்.. அப்போது அந்த வீட்டினுள் 3 நாகப்பாம்புகளை லாவகமாக பிடித்தார்.

பிடிக்கப்பட்ட 3 பாம்புகளையும் வனப்பகுதியில் பத்திரமாக விடுவதற்காக எடுத்துச்சென்றபோது, எதிர்பாராத விதமாக அந்த 3 பாம்புகளில் ஒன்று கவுதம் குமாரின் கையை கடித்துவிட்டது..

எந்த பாம்பு கடித்தது

ஆனால் அந்த 3 பாம்புகளில் எந்த பாம்பு தன்னை கடித்தது என்று கவுதமுக்கு தெரியவில்லை.. இதனால் தம்மைக் கடித்தது எந்தப் பாம்பு என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், மூன்று நாகப்பாம்புகளையும் ஒரே பையில் வைத்துக்கொண்டு உடனடியாக சாசாராம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்..

சிகிச்சைக்காக வந்த கவுதம் குமார் தனக்கு என்ன நடந்தது என்று டாக்டர்களிடம் சொன்னார்.. அப்போது தன்னுடைய குழப்பத்தையும் சொல்லி, பையில் இருந்த மூன்று நாகப்பாம்புகளையும் மருத்துவர்களிடம் வெளியே எடுத்துக் காட்டினார்.

சுமார் 8 முதல் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்புகள் சீறுவதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் , நோயாளிகள் என அனைவருமே அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால், மருத்துவமனை வளாகமே பதற்றமும், பரபரப்புமாய் காணப்பட்டது..

அரசு மருத்துவமனை டாக்டர்கள்

உடனடியாக தகவலறிந்து வந்த வனத்துறையினர், மருத்துவமனைக்கு வந்து அந்த நாகப்பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, டாக்டர்கள் கவுதமுக்கு தீவிர சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

பிறகு டாக்டர்கள் "பாம்பு கடித்தால் உயிருள்ள பாம்புகளை மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. அதன் போட்டோ அல்லது விளக்கம் இருந்தாலே எந்த வகை பாம்பு என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இனிமேல் இப்படி உயிருள்ள பாம்புகளை கொண்டு வருவது மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தானது" என கவுதம் குமாருக்கு அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+