"கிளம்பறேன் இருங்க".. 2 பிரம்மாஸ்திரத்துடன் ஈரோடு வர்றார் எடப்பாடி.. யாரு உதய்ண்ணாவா?.. பலே பிளான்ஸ்
அதிமுக வேட்பாளர் தென்னரசு தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் இன்று ஈடுபடுகிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்தை துவக்க உள்ள நிலையில் அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி வகுத்து வரும் சில வியூகங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்பது எழுதப்படாத நடைமுறைதான்.. இதை அதிமுகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது என்றாலும், இதையும் தாண்டி, இந்த இடைத்தேர்தலை சீரியஸாக அணுகி வருகிறார் எடப்பாடி என்கிறார்கள்.
ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக குறிப்பாக தன்னுடைய பலம் வலுவாகவே உள்ளது என்று எடப்பாடி நம்புகிறார்.. எனினும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுகவின் விஸ்வரூபம் திமுகவுக்குள் அதிகமாகி உள்ளது..

எடப்பாடி பழனிசாமி
அதிலும் செந்தில் பாலாஜியின் கையில் கொங்கு சென்றபிறகு, லேசான நடுக்கம் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளதும் உண்மைதானாம்.. அதனால்தான், இந்த முறை கொங்குவிலேயே நடக்க போகும் இடைத்தேர்தலை மிக சரியாக பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்துள்ளாராம் எடப்பாடி.. அதனாலேயே கூட்டணிக்குகூட தொகுதியை ஒதுக்காமல் நேரடியாக களமிறங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த கொங்கு மண்டலத்தில், தன்னுடைய பலத்தை மேலும் பெருக்கி, அதிகப்படியான வாக்கு வங்கியை பெற்றுவிடுவது என்பது முதல் திட்டமாக உள்ளது.. இந்த வாக்கு வங்கியானது, வரப்போகும் எம்பி தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் நம்புகிறார்.

மாஸ்டர் பிளான்கள்
அடுத்ததாக, அதிமுகவுக்கு ஒரே தலைவர் தான் மட்டுமே என்பதுடன், நிரந்தர பொதுச்செயலாளர் என்ற புள்ளியை நோக்கி நகரவும் இந்த வாக்கு வங்கியானது உதவும் என்று கணக்கு போடுகிறார்... ஓபிஎஸ்ஸின் மிச்சமுள்ள குடைச்சலுக்கும், ஒரு முடிவுக்கட்ட இந்த இடைத்தேர்தலை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதால்தான், ஆளும்தரப்பையும் மிஞ்சும் அளவுக்கு வியூகங்களை வகுத்து வருகிறார் என்கிறார்கள்... எப்படியும் ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் கைவிடாது என்றாலும், கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டி வைக்க, இந்த வாக்கு பலம் நிச்சயம் தனக்கு உதவும் என்று நம்புகிறாராம் எடப்பாடி..

உதய்ண்ணா
எனவே, திமுகவை விமர்சிக்கும்போதெல்லாம் ஓபிஎஸ் மீதான அதிருப்தியை நிச்சயம் எடப்பாடி இன்றைய தின பிரச்சாரத்தில் வெளிப்படுத்துவார் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, திமுக அரசு மீது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே எடப்பாடி பழனிசாமி புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தாலும், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, உதயநிதியை அதிகம் டார்கெட் செய்ய பிளான் செய்யப்பட்டுள்ளதாம்... கடந்த தேர்தலின்போதே, உதயநிதி ஸ்டாலினை அதிகம் சீண்டி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவந்த நிலையில், அதே யுக்தியைதான் இந்த இடைத்தேர்தலிலும் இறக்க போகிறாராம்.

நீட்
அதிலும், நீட் விஷயத்தில் முதல் கையெழுத்து என்று அன்று உதயநிதி சொன்னதையே, விடாப்பிடியாக பிடித்து கொண்டுள்ள எடப்பாடி, அதை வைத்தே உதயநிதியின் இமேஜை டேமேஜ் செய்யவும் திட்டமுள்ளதாக தெரிகிறது.. உதயநிதி பிரச்சாரத்துக்கு வருவதற்கு முன்பேயே, இந்த வியூகத்தை செயல்படுத்தவும் முடிவாகி உள்ளதாம்.. ஆக, இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா என மொத்த பேரையும் ஒதுங்க செய்துள்ளதுடன், இலையையும் பெற்று களமிறங்கி உள்ளதால், எடப்பாடி பழனிசாமிக்கான களம் சாதகமாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. இன்னொரு விஷயமும் கசிந்துவருகிறது..

செங்குந்த முதலியார்
இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதியில் செங்குந்த முதலியார் சமூகத்தினர் வாக்குகள் பிரதானமாக உள்ள நிலையில், தற்போது, அவர்களை பிரதான கட்சிகள் புறக்கணித்ததாக அந்த சமூகத்தினர் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவுகிறதாம்.. இந்த விஷயம் எடப்பாடி காதுக்கு எட்டிய நிலையில், செங்கோட்டையனை உடனடியாக தொடர்பு கொண்டு, முதலியார் சங்க நிர்வாகிகளுக்கு சில விஷயங்களை "கவனிக்க" சொல்லி உத்தரவிட்டாராம்.. அதாவது கவுண்டர் சமுதாய வேட்பாளரை களமிறக்கிய நிலையில், செங்குந்த முதலியார் சமூக வாக்குகளையும் தன்பக்கம் திரும்பும் என்றும் திடமாக நம்புகிறாராம் எடப்பாடி.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

தவிடுபொடிகள்
இதனிடையே, லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய இந்த கள ஆய்வில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 53 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு 42 சதவீதம் பேர் மட்டும் வாக்களித்துள்ளனர்... இதன் மூலம் பழனிச்சாமியா? ஸ்டாலினா? என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று சொல்லப்பட்டுள்ளதாக லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதும் எடப்பாடிக்கு சாதகமாக அமைந்துள்ளதாம்.. இந்த விஷயத்தையே சூட்டோடு சூட்டாக இன்றைய பிரச்சாரத்தில் கொண்டு செல்லவும் திட்டமிட்டு வருகிறாராம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications