ரூ.50000 வருமானம்! 2 கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கே டஃப் தரும் சலுகை! அட இவங்களா
சென்னை: விழுப்புரத்தில் ஒரு தனியார் மண்டப நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.. தமிழக அரசியல் கட்சிகள் படு ஸ்பீடில் மும்முரமாகி கொண்டிருந்தால், இந்த லிஸ்ட்டில் புதிய பாய்ச்சலுடன் விவசாயிகளும் இணைந்துள்ளனர்.. அந்தவகையில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற கட்சி.
விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற கட்சி என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது.. இதற்கான துவக்க விழாதான் நேற்று நடைபெற்றது.. இது வெறும் கட்சி அறிவிப்பாக மட்டுமில்லாமல், பல வருடங்களாகவே விவசாய சமூகம் அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கான ஒரு எதிர்வினையாகப் பார்க்கப்படுகிறது..

விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற கட்சி
மாநில தலைவர் பரிமளம் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிகழ்வு, தமிழகத்தின் முதன்மைத் தொழிலான விவசாயத்தை அதிகார மையத்தை நோக்கி நகர்த்தும் முயற்சியாகும்..
இந்த புதிய கட்சியின் வரவு என்பது ஒரு திடீர் நிகழ்வல்ல, மாறாக தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களின் ஒருமித்த குரலாக இது உருவெடுத்துள்ளது..
அரசு ஊழியர்கள் தங்களின் சலுகைகளுக்காக போராடி பெறுவதை சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டுக்கு வெறும் 20 ஆயிரம முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வருமானம் ஈட்டும் அவல நிலையைச் சாடினார்கள்..
புதிய விவசாயிகள் கட்சி
இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் விவசாயத்தை கைவிடும் சூழலே இந்த புதிய அரசியல் கட்சிக்கான விதையாக அமைந்துள்ளது.. தமிழகத்தில் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதே முதன்மைக் கொள்கை என்று அறிவித்துள்ள இக்கட்சி, 3 மாதங்களுக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது மற்றும் விவசாயத் துறையில் நிலவும் லஞ்சத்தை ஒழிப்பது போன்ற அதிரடித் திட்டங்களை முன்வைத்துள்ளது..
இந்த கட்சியின் தாக்கம் என்பது வரும் தேர்தல்களில் மிக முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, இரண்டு கோடி விவசாயக் குடும்பங்களுக்குக் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்குவதாக அவர்கள் கூறியிருப்பது, கிராமப்புற வாக்கு வங்கியில் பெரிய சலனத்தை ஏற்படுத்தக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
50 தொகுதிகளில் தனித்து போட்டி
வரும் தேர்தலில் 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது அல்லது விவசாயிகளின் நலனை ஏற்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது என்ற இவர்களின் நிலைப்பாடு, தற்போதைய பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கும் என தெரிகிறது..
குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தமிழகத்தில் வலுவாக இருக்கும் திராவிடக் கட்சிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற அமைப்புகளின் விவசாய வாக்கு வங்கியில் இது ஒரு சிறு பிளவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது..
தனிப்பட்ட ரீதியில் பார்க்கும்போது, ஒரு கட்சியின் வெற்றி என்பது வெறும் கொள்கை அறிவிப்புகளில் மட்டும் இல்லை, அது களப்பணியில் எவ்வளவு தூரம் விவசாயிகளை சென்றடைகிறது என்பதில் தான் உள்ளது..
கிங் மேக்கர்
தமிழக அரசியல் வரலாற்றில் பல விவசாய சங்கங்கள் தேர்தலை சந்தித்திருந்தாலும், அவை பெரிய வெற்றிகளை ஏனோ பெற்றதில்லை.. ஆனால், 300 சங்கங்களின் ஒருங்கிணைப்பு என்பது நேற்று ஆரம்பித்துள்ள இந்த கட்சிக்கு ஒரு பலமான அடித்தளத்தை துவக்கத்திலேயே தந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், அரசு அதிகாரிகளைக் கண்காணிப்பது மற்றும் வருமானத்தை உயர்த்தும் திட்டங்கள் போன்ற நடைமுறை சாத்தியமான அறிவிப்புகள் மக்களிடம் எடுபட்டால், இந்த கட்சி ஒரு கிங் மேக்கராக மாறவும் வாய்ப்புள்ளது..
விவசாயிகளின் உண்மையான வலியைப் பிரதிபலிக்கும் இந்த இயக்கம், மற்ற கட்சிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வைக்கும் ஒரு தார்மீக அழுத்தத்தை நிச்சயம் உருவாக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications