ஏன் மக்களே இப்படி.. சொல்லச் சொல்லக் கேட்காமல் குவிந்த வாகனங்கள்.. பாடி பாலத்தில் பெரும் நெரிசல்!
சென்னை: ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அங்கு வாகனங்கள் அனைத்தையும் எதற்காக வருகிறார்கள் என்பதை சோதனை நடத்தி, விசாரித்தே விடுவித்து வருவதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஆந்திராவில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு பிரதானமான வழி பாடி மேம்பாலம். இந்த மேம்பாலம், ஒருபக்கம் வில்லிவாக்கம், மறுபக்கம் அம்பத்தூர், இன்னொரு பக்கம் அண்ணா நகர், கோயம்பேடு, அதற்கு எதிர்பக்கம் ரெட்ஹில்ஸ் மற்றும், ஆந்திரா என நான்கு முனை முக்கிய சந்திப்பாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் பாடி மேம்பாலத்தில் வாகனங்கள் அதிக அளவு சென்றன. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர், பணிக்கு செல்வோர், அவசியமே இல்லாமல் வெளியில் செல்வோர் என அந்த மேம்பாலமே வாகனங்கள் நெரிசலால் திணறி வருகிறது. இதனால் மேம்பாலத்தின் நான்கு சாலைகளையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகே வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.
அநாவசியமாக வந்தவர்களை பிடித்து வைத்து விசாரித்து வரும் போலீசார், அத்தியாவசிய தேவைகளுக்காக வந்தவர்களை விசாரணைக்கு பின்னர் அனுப்பி வருகிறார்கள்.

சென்னை முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்ட போதிலும் சென்னை, திருவள்ளூர் ஆந்திராவை இணைக்க கூடிய முக்கிய பாலமாக இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த பாலம் மூடப்படாமல் உள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலை வழியாக இன்று காலை சென்ற நிலையில், போலீசார் வாகன தணிக்கை செய்தே அனுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது பலர் சமூக பரவலை கடைபிடிக்காமல் நெருக்கமாக வாகனத்தில் நிற்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவசியமின்றி பலரும் வெளியில் சுற்ற வாகனங்களில் வந்ததும் நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications