தமிழ்நாட்டில் இன்று "இங்கெல்லாம்" மழை வெளுக்க போகுது.. உஷாரா இருங்க.. வானிலை மையம் வெளியிட்ட லிஸ்ட்!
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
முக்கியமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மழை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. திடீரென என்று 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மாலையும், இரவும் கோடை மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் நீடிக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது.
நேற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. சென்னையில் லேசான சாரல் மழை பெய்தது.

அடுத்த 2 நாட்களுக்கு தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். சில இடங்களில் நீண்ட நேரம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: அதிசயமாக சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 9 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது,. பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது.
அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது.
மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நீடிக்காது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த கோடை மழை பெய்து உள்ளது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அடுத்த 3-5 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் அடிக்கும். முக்கியமாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் வாய்ப்பு உள்ளது.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. கடந்த வாரம் முழுக்க சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

3 நாட்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36°F வெயில் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் 104.36°F
ஈரோடு 104.00°F
சேலம் 103.28°F
நாமக்கல் 103.10°F
கரூர் 102.56°F
வேலூர் 102.02°F
திருச்சி 100.58°F
திருத்தணி 100.58°F
தர்மபுரி 100.4°F
மதுரை 100.04°F வெப்பநிலை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் வரும் வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications