"ஹாட்ரிக்.. யானை பலத்துடன் "ஒற்றை தலைமை" எடப்பாடி பழனிசாமி.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா.. அப்ப பாஜக?
சென்னை: நினைத்தபடியே இன்று கட்சியை தன்வசம் கொண்டுவந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, அதிமுக என்ற ஆலமரத்தை தன் கைக்குள் கொண்டுவந்து, அதன் அதிகாரப்பூர்வமான தலைவராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முதலமைச்சர் & பொதுச்செயலாளர் என்ற இந்த இரண்டு பதவியையுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசிவரை விடாமல் தன்னிடம் வைத்திருந்தார்..
சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

காய் நகர்த்தல்
இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவிதான், அதிமுக இன்று 4ஆக பிளவுபடும் அளவுக்கு சென்றுவிட்டது.... ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் ஆரம்ப கால திட்டமாக இருந்து வந்தது.. இந்த பதவிக்காக, ஜெ.போலவே காய் நகர்த்தலையும் ஆரம்பித்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்த ஒரு வருட காலமாகவே, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற போஸ்டிங்கில் இருந்துகொண்டே, மறுபக்கம், அதிமுகவை தன் பக்கம் கொண்டுவருவதற்கான களப்பணியில் இறங்கினார்..

ராஜதந்திரம்
ஏற்கனவே கொங்குவை தன்பிடியில் இறுக்கமாக வைத்திருந்த நிலையில், தென்மண்டலங்களில்தான் தன் குறியை வீசினார் எடப்பாடி பழனிசாமி.. இத்தனைக்கும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒட்டுமொத்த தென்மண்டலமே எடப்பாடி மீது கோபத்தில் இருக்கிறது என்று தெரிந்தும்கூட, ஆர்பி உதயகுமாருக்கு முக்கிய பொறுப்புகளை தந்து, தேவர் சமூக வாக்குகளையும் பலப்படுத்த துவங்கியுள்ளதுடன், தென்மண்டலங்களில் ஓபிஎஸ்ஸுக்கான செல்வாக்கையும் இழக்க செய்து வருகிறார்.. இதெல்லாம் ஜெ.வின் ராஜதந்திரங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

ராஜதந்திரங்கள்
வழக்கமாக, தேர்தல் பிரச்சாரம் என்றாலும்கூட, ஜெ.பாணியில்தான் எடப்பாடி தன்னுடைய பிரச்சாரங்களை மேற்கொள்வார்.. அதுபோலவேதான், ஒற்றை தலைமை விவகாரத்திலும் ஜெ.பாணி ரூட்டை பிடித்தார்.. அதனால்தான், இவரது துணிவையும், சாதுர்யத்தையும் கண்டு, அதிருப்தியில் இருந்தவர்களே மனம்மாறி, எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர்.. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.. அதுமட்டுமல்ல, அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கே என்ற ரீதியில் சட்ட விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது...

புது மேட்டர்
இதுதான் ஜெயலலிதாவின் தொண்டர்களை அதிர செய்துள்ளது.. காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இதே போல பொதுச்செயலாளர் விவகாரம் தலைதூக்கியது.. அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் 2 பேரும் சேர்ந்து சொன்னது, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்பதுதான்.. அதனால்தான், பொதுச்செயலாளர் என்ற மேட்டருக்குள் நுழைய கூடாது என்பதற்காக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளையே உருவாக்கினர்.. எனினும், பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டபோது, அதிமுக தொண்டர்கள் சற்று அதிர்ந்துதான் போனார்கள்..

ஒற்றை தலைமை
எந்தவித சட்டதிருத்தமானாலும், விதிகளாலும், ஜெயலலிதாவுக்கான முக்கியத்துவத்தை இழக்காமல் உருவாக்கப்பட்டால், அது தொண்டர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில், "ஒற்றை தலைமை" குறித்த பிரச்சினை தேவையா? அதிமுகவில் ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம். மீண்டும் அப்பதவியை கொண்டு வந்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓபிஎஸ் தரப்பு உட்பட பல்வேறு அதிமுக தொண்டர்களும் குமுறி கொட்டினார்கள்..

சகதிகள்
ஒருபக்கம் கட்சியை சரிக்கட்டிக்கொண்டே, மறுபுறம் பலம்வாய்ந்த சட்டக்குழுவை கொண்டு, தன் வாதங்களை முன்வைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.. "ஒற்றை தலைமை இருந்தால்தான், திமுகவை சரியாக எதிர்கொள்ள முடியும்" என்ற வாதமும் எடப்பாடி பழனிசாமியால் கோர்ட்டில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.. "கட்சியை இப்போது மாற்ற வேண்டிய சூழல் இருப்பதால், கட்சியை காப்பாற்ற வசதியாக விதிகளை மாற்றுவதில் தவறில்லை. இல்லாவிட்டால் திமுக என்ற சகதியில் சிக்கி கொள்ள நேரிடும்" என்று எடப்பாடியின் ஆதரவாளர்களும் விடாமல் வலியுறுத்தி கொண்டே இருந்தார்கள்..

ஆலமரம்
இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. "நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா" என்ற விஷயம் எல்லாம் காலத்தின் கட்டாயத்தினால், சுக்குநூறாக நொறுங்கி விழுந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில், ஆலமரம் போன்ற அதிமுகவுக்கு தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதன்மூலம், தமிழக அரசியல் களத்தில் திமுக Vs அதிமுக மட்டுமே இருக்கும் என்பதை பறைசாற்றப்பட்டுட்டுள்ளது.. அத்துடன், உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதையும், பாஜகவுக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. தன் அசாத்திய திறமையாலும், விடாமுயற்சியாலும் கட்சியை தன்வசம் எடப்பாடி கொண்டுவந்துவிட்டாலும், இனிதான் எடப்பாடிக்கு சிக்கலே அதிகரிக்க போகிறது.

ஆலமரம்
இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. "நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா" என்ற விஷயம் எல்லாம் காலத்தின் கட்டாயத்தினால், சுக்குநூறாக நொறுங்கி விழுந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில், ஆலமரம் போன்ற அதிமுகவுக்கு தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதன்மூலம், தமிழக அரசியல் களத்தில் திமுக Vs அதிமுக மட்டுமே இருக்கும் என்பதை பறைசாற்றப்பட்டுட்டுள்ளது.. அத்துடன், உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதையும், பாஜகவுக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதுமட்டுமல்ல, எந்தவிதமான நெருக்கடியும் நிர்ப்பந்தமும் அழுத்தமும் இல்லாமல் கட்சியை, தன் தலைமையில் நடத்த வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் விருப்பமாக உள்ளது..

ஆதங்கம்
ஆனால், எடப்பாடியின் ஆட்டத்தை கலைத்து, தன் தலைமையிலான கூட்டணிக்கு பாஜக முயற்சிப்பதும், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் பாஜக வேண்டுகோள் விடுத்து வருவதும், எடப்பாடிக்கு குடைச்சலையே தந்து வருகிறது.. ஏற்கனவே கடந்த தேர்தல்களில் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க காரணமே பாஜகதான் என்ற ஆதங்கத்தில் எடப்பாடி இருக்கும்போது, இன்றைய தீர்ப்பானது, பாஜகவை எதிர்கொள்ள எடப்பாடிக்கு, மிகப்பெரிய கேடயமாக இருக்கும் என்று தெரிகிறது.. கூட்டணி விவகாரம் முதல், பாஜகவின் தயவு இல்லாமலேயே தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், இன்று அந்த முடிவானது மேலும் வலுப்பெற்றுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், எடப்பாடியின் தயவை நேரடியாகவும், வெளிப்படையாகவும் பாஜக பெற வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளது.. எடப்பாடி இல்லாத கூட்டணி சாத்தியமேயில்லை என்ற நெருக்கடிக்கு பாஜக உள்ளாகி உள்ளதாகவே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, ஒருங்கிணைந்த அதிமுக என்ற பாஜகவின் கனவுக்கோட்டையும் தகர்ந்துள்ளது.

ஆண்டிப்பட்டி
தன் அசாத்திய திறமையாலும், விடாமுயற்சியாலும் கட்சியை தன்வசம் எடப்பாடி கொண்டுவந்துவிட்டடாலும், இனிதான் எடப்பாடிக்கு சிக்கலே அதிகரிக்க போகிறது. ஒருமுறை, நம்முடைய ஒன் இந்தியா சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் மணி ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தபோது, "எடப்பாடி தன்னை ஒரு ஜெயலலிதாவாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்.. அதுதான் அவரிடமுள்ள பெரிய பலவீனம்" என்று கூறியிருந்தார்.. அதேபோல, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு பேட்டியில் சொல்கிறார், "எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. தமிழகத்திலேயே வேறு ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி ஜெயிப்பாரா? ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்.. காரணம் இவர் பகுதி தலைவர்.. ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது.. ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்..

ரத்தத்தின் ரத்தங்கள்
மேலும், எந்த ஒரு கட்சி தலைவருக்குமே "அரவணைப்பு" என்பது அவசியமான அடிப்படை பண்பாக உள்ள நிலையில், தனக்கு ஓபிஎஸ்ஸும் வேண்டாம், சசிகலாவும் வேண்டாம், தினகரனும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம், என்று ஒவ்வொருவரையும் நிராகரித்து வருவது, எத்தகைய பலத்தை எடப்பாடிக்கு பெற்று தரப்போகிறது? விடாமுயற்சியாலும், பிடிவாதத்தாலும், தன்னம்பிக்கையினாலும், கட்சியை தன்வசம் "தற்சமயம்" கொண்டுவந்துவிட்டாலும், எத்தனை காலத்துக்கு எடப்பாடி பழனிசாமி கட்சியை தன்வசம் தக்க வைக்க போகிறார்? அதிருப்தியே இல்லாத தலைவராக உருவெடுப்பாரா? என்பதே எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்புகளாக இன்று உருமாறி நிற்கிறது..!!!












Click it and Unblock the Notifications