மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு! உயிரை கொடுமைப்படுத்தி குடித்த.. இஸ்ரேலின் பாஸ்பரஸ் குண்டு! வெளியான ஆதாரம்
சென்னை: இஸ்ரேலின் பாஸ்பரஸ் குண்டு பயன்பாட்டை உலக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலுக்கு Human Rights Watch கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்துவதால், பொதுமக்கள் கடுமையான மற்றும் நீண்டகால காயங்களுக்கு ஆளாகிறார்கள், அவர்கள் கொடுமைகளை சந்தித்து மரணங்களை சந்திக்கிறார்கள், என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் லெபனான் மற்றும் காசாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, புகைப்படங்களை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சோதனை செய்துள்ளது. காசா நகர துறைமுகம் மற்றும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உள்ள இரண்டு கிராமப்புற இடங்களில் பீரங்கிகளால் வீசப்பட்ட குண்டுகளில் வெள்ளை பாஸ்பரஸ் இருந்ததை உறுதி செய்துள்ளனர். இங்கே வெள்ளை பாஸ்பரஸ் மூலம் மக்கள் கொடுமை படுத்தப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளை பாஸ்பரஸ் மக்களையும் பொருட்களையும் எரிக்கும் தீயை உருவாக்கும் திறன் கொண்டது. நொடியில் தீயை இது உருவாக்கும். அதேபோல் நச்சுவாய்ந்த புகையை வெளியிட்டு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக மரணத்தை கொடுக்காமல் சில நாட்களுக்கு கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. பூச்சு கொல்லியாக இது பயன்படுத்தப்படும் இதை குண்டாக மாற்றி பயன்படுத்தும் பட்சத்தில் அது உயிரை கொடுமைப்படுத்தி கொல்லக்கூடியது.
வெள்ளை பாஸ்பரஸ்: வெள்ளை பாஸ்பரஸ் மக்கள் நெரிசலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டால், அது கடுமையான தீக்காயங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கடுமையான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக குழந்தைகள் மூச்சு திணறி, நுரை தள்ளி மரணம் அடையும் ஆபத்துகளும் உள்ளன. அக்டோபர் 11 அன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் காசா நகரில் உள்ள அல்-மினா பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை தொலைபேசி இது தொடர்பாக மூலம் பேட்டி கண்டது.
( இஸ்ரேலை அதிர வைத்த மோடி.. பாலஸ்தீன தனி நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு.. பதற வைக்கும் முடிவு! )
அவர்கள் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதை விசாரணையில் உறுதி செய்துள்ளனர். இவர்கள் பாஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் காரணமாக இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.இஸ்ரேல் - பாலஸ்தீன போர்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடக்கும் போர் தற்போது சர்வதேச போராக உருவெடுக்க தொடங்கி உள்ளது. இந்த போரில் அடுத்தடுத்து எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக பல்வேறு உலக நாடுகள்.. முக்கியமாக வல்லரசு நாடுகள் இதில் நேரடியாக தலையிட தொடங்கி உள்ளன.
இதனால் போர் கைமீறி போகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த போரில் ஏற்கனவே ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. ஈரான் படைகள் லெபனான் வழியாக இஸ்ரேலை தாக்கி வருகிறது. அதேபோல் லெபனான் இதில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது. இதனால் மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ஏற்கனவே லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸ் படைக்கு ஆதரவாக படைகளை அனுப்பி உள்ளது. ஹமாஸ் படைக்கு ஆதரவாக போர் வீரர்கள், ஆயுதங்கள், நிதி உதவிகள், உளவு உதவிகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏற்கனவே அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், உளவு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது பாஸ்பரஸ் குண்டு பயன்பாடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications