ஸ்டாலின் தந்த தேர்தல் வாக்குறுதி... நிஜமானது ஆலங்குடி கல்லூரி கனவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக, தான் வந்தால், மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு ப்ளூ பிரின்ட்டைத் தயாரித்திருந்தார் ஸ்டாலின்.

ஒவ்வொரு மாவட்டமாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தின் மூலம் மக்கள் கோரிக்கைகளைக் கேட்டு மனுவாகப் பெற்றார். அவர் மக்களைப் பார்த்து 'ஒன்றிணைவோம் வா' அழைத்த போது அதை ஆளும் கட்சி மிக எளிமையாகக் கடந்து சென்றது.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

சில அமைச்சர்கள் 'அத்தைக்கு மீசை முளைக்கட்டும்' என்று பழமொழி பேசி, ஸ்டாலின் பயணத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.

ஆனால், அந்தப் பயணத்தின் மூலம்தான் பாமர மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற 'பல்ஸ்' ஸ்டாலினுக்கு பிடிபட்டது. அவர்களின் தேவை என்ன? குறைகள் என்ன? எனத் துல்லியமாக அவர் புரிந்துகொண்டார்.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

'கோரிக்கை மனுக்கள் அனைத்தும் கோட்டைக்குக் கொண்டுபோகப்படும். ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் தீர்வு காணப்படும்' என்று அவர் அறிவித்தார். அந்த அறிவிப்பு அவர் முதல்வராக வந்ததும் செயல்வடிவம் பெற்றது.

அவர் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரச்சாரத்திற்காகப் புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தபோது ஆலங்குடி மற்றும் திருமயத்திலிருந்த இளைஞர்கள் தங்கள் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதியதாக 10 கல்லூரிகள் சுமார் ரூ 166.5 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். அதில் ஒன்றுதான் இந்தப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கல்லூரி.

ஏப்ரல் மாத அறிவிப்பைத் தொடர்ந்து ஜூலை மாதம் 2022-ம் ஆண்டு தமிழகத்தில் புதியதாக 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறந்துவைத்தார் முதலமைச்சர்.

அமைச்சரின் அறிவிப்பு என்னவோ 10 மட்டுமே வெளியானது. ஆனால், அதைச் செயல் படுத்தும்போது அப்படியே 2 இரண்டு மடங்கு உயர்த்து 20 ஆக்கினார் முதல்வர் ஸ்டாலின்.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

மேலும் இந்தக் கல்லூரிகளுக்கான பயன்பாட்டிற்காக ரூ 152 கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களைத் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மாணவர் ராம விஷ்ணு, "நான் இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கல்லூரி வருவதற்கு முன்னால், புதுக்கோட்டை இளைஞர்கள் கல்லூரி படிக்கவேண்டும் என்றால் ஆவுடையார்கோயில் அல்லது பட்டுக்கோட்டை, புதுக்கோட்டைக்குத்தான் போக வேண்டும். எங்கள் சுற்றுவட்டாரத்தில் அரசு கல்லூரியே இல்லை.

அதனால்தான் கோரிக்கை வைத்தோம். இப்போது ஆலங்குடியில் கல்லூரி திறந்துள்ளார்கள். இதனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார்.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

மாணவி கௌசல்யா, "முதல்வர் ஸ்டாலின் ஐயா தேர்தல் சமயத்தில் இங்கே பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். அப்போது மக்கள் கோரிக்கையை ஏற்று ஆலங்குடியில் ஒரு அரசு கல்லூரியைக் கட்டி தருகிறோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அவர் சொன்ன மாதிரியே அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்திருக்கிறார். எங்கள் ஊர் ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டைப் போய் படிக்கவேண்டும் என்றால், எனக்கு ஒரு மணிநேரம் ஆகும்.

மகேஸ்வரி, "நான் இரண்டாம் ஆண்டு வணிகவியல் படித்துவருகிறேன். இந்தக் கல்லூரி வரவில்லை என்றால் நாங்கள் புதுக்கோட்டை அல்லது காரைக்குடி வரை போய் படிக்க வேண்டும். எங்கள் கிராமத்திலிருந்து இவை அதிக தூரம். அந்த அலைச்சலைக் குறைத்துள்ளது இந்தப் புதிய கல்லூரி.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

இது மட்டுமல்லாமல் மாதம் ஆயிரம் ரூபாய் 'புதுமைப் பெண்' திட்டத்திலிருந்து எங்கள் கல்விச் செலவுக்காக அரசு ஊக்கத் தொகையும் அளித்து வருகிறது. இந்த உதவியைச் செய்து வரும் முதல்வர் ஐயா ஸ்டாலினுக்கு மாபெரும் நன்றி" என்கிறார்

ஆட்சிக்கு வந்ததும் அதை உடனடியாக நிறைவேற்றித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்போது ஆலங்குடியில் அரசு கல்லூரி ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இவர் திருமயத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கல்லூரியில் படித்து வரும் சிரஞ்சீவி பேசும் போது, "நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ்த்துறையில் படித்து வருகிறேன்.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

இந்தக் கல்லூரியை 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் புதியதாக நிறுவப்பட்டது. இதில் 430 மாணவர்கள் படிக்கின்றார்கள். இந்தக் கல்லூரி திருமயம் மாதிரியான சின்ன கிராமத்தில் அமைந்துள்ளது. அது எங்களைப் போன்ற மாணவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கிறது.

இது மட்டும் தொடங்கப்படவில்லை என்றால் சிவகங்கை மாவட்டம் போய் படிக்கவேண்டும். இதை எங்கள் பகுதியில் அமைத்துக் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி" என்கிறார்.

பாதம் பிரியா, "என்னைப் போன்ற கிராமத்துப் பெண்கள் இந்த மாதிரி ஒரு கல்லூரி அருகிலேயே வராமல் இருந்திருந்தால் உயர்கல்வி படிக்க வந்திருக்க முடியாது. பெற்றோர்கள் வெளி ஊர்களுக்கு அனுப்பிப் படிக்கவைக்க முன்வரமாட்டார்கள். அந்தளவுக்குப் பொருளாதார வசதியில்லை.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas

ஆகவே பள்ளிப் படிப்போடு என் படிப்பு முடிந்துபோய் இருக்கும். அந்த நிலை ஏற்படாமல் காப்பாற்றித் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் இந்தக் கல்லூரியைத் திறந்தது மட்டும் இல்லை; படிப்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துகிறார்.

'புதுமைப் பெண்' திட்டம் மூலம் நான் பயனடைந்திருக்கிறேன். கல்லூரி வந்து படிப்பதற்கான செலவை அரசே அளித்து வருகிறது. ஆகவே பெற்றோரை நம்பி இருக்கவேண்டிய சூழல் எழவில்லை. ஆகவே முதல்வருக்கு என்னைப் போன்ற மாணவிகள் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்கிறார்.

 Hundreds of students have benefited from the newly opened government colleges in Alangudi and Thirumayam areas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+