Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு

தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனக்கு உன்னை பிடிக்கலை, வேற பொண்ணை கல்யாணம் செய்ய போகிறேன்" என்று கணவர் சொன்னதால், மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.. மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது கால்கள் உடைந்துவிட்டன.. வரதட்சணை கொடுமையால் சென்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்... இவரது தங்கை விக்னி நாக நந்தினி... இவருக்கும் செந்தில்நாதன் என்பவருக்கும் கடந்த வருடம் கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளை செந்தில்நாதன் கிண்டியிலுள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

husband arrested for dowry issue, near chennai

இது ஒரு காதல் கல்யாணம்.. ஒரு இன்டர்வியூவில் சந்தித்து கொண்டனர்.. அப்போது மலர்ந்தது காதல்.. நந்தினிக்கு அப்பா இல்லை.. படிக்க வைத்து வளர்த்தது எல்லாம் அண்ணன் நாகேந்திரன்தான்... அதனால் நந்தினி காதல் விவகாரத்தை வீட்டில் சொன்னதும், நாகேந்திரன்தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

ஆனால் நல்லா படிச்சிருந்தாலும், கை நிறைய சம்பளம் வாங்கினாலும், செந்தில்நாதன் குடும்பத்தினருக்கு பணத்தாசை குறையவில்லை.. நந்தினியை மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பமே சேர்ந்து பல வகையில் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.. இன்னும் நகை வேணும், புது கார் வேணும் என்று கேட்டதுடன், ஒருகட்டத்தில் வீட்டை விட்டு துரத்தவும் முடிவு செய்தனர்.

செந்தில்நாதனிடம் இதை பற்றி எல்லாம் நந்தினி சொன்னால், "எனக்கு உன்னை பிடிக்கலை.. வேறொரு வேற ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய போகிறேன்" என்று கறாராக சொல்லிவிட்டார். .

இதனால் மனமுடைந்த நந்தினி, தற்கொலை செய்ய முடிவெடுத்து, தன் வீட்டின் 2வது மாடியில் இருந்து குதித்துவிட்டார்... இதில் அவரது 2 கால்களுமே முறிந்தது.. பற்கள் மொத்தமும் உடைந்தது.. உதடுகள் கிழிந்து தொங்கின.. இதையடுத்து நந்தினியின் அண்ணன் நாகேந்திரன் போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் செய்யவும் அவர்கள் விசாரித்தனர்.. செந்தில்நாதனை அதிரடியாக கைது செய்தனர். ஆனால் நந்தினியின் மாமனார், மாமியார், நாத்தனார் என எல்லாருமே எஸ்கேப்.. அவர்களை தேடி வருகின்றன.
கல்யாணத்தின்போது, செந்தில்நாதனுக்கு 5 பவுன் சங்கிலி போடலாம் என்று நாகேந்திரன் சொல்லியிருந்தார்.. ஆனால் பண கஷ்டத்தால் அதை உடனே போடமுடியவில்லை.. அந்த செயினை இப்போது கேட்டுதான் வரதட்சனை கொடுமை நடந்துள்ளது.. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கணவருக்கு நந்தினி போன் செய்துள்ளார்.

ஆனால் அவர் நந்தினி போனை எடுக்கவே இல்லையாம்.. அதனால் அண்ணனுக்கு தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, அதற்கு பிறகுதான் மாடியில் இருந்து குதித்துள்ளார்.. தற்போது 2 கால்கள் முறிந்த நிலையில், நந்தினிக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+