பீர் பாட்டிலை உடைத்து.. காமாட்சி கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்திய ராஜன்.. காரணம் சந்தேகம்!
மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்
சென்னை: பீர் பாட்டிலை எடுத்து.. உடைத்து.. காமாட்சியின் தொடை, கழுத்து, வயிறு, பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டார் கணவன் ராஜன்.. காரணம் மனைவி மீது சந்தேகம்!
சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த தம்பதி ராஜன் - காமாட்சி.. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராஜன் சமையல் வேலை பார்த்து வருகிறார். காமாட்சிக்கு 28 வயதாகிறது.
நன்றாக போய் கொண்டிருந்த குடும்ப வாழ்வில் திடீரென சந்தேக புயல் வீச தொடங்கியது. காமாட்சிக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக ராஜன் நினைத்தார்.. இந்த சந்தேகம் வீட்டில் தினந்தோறும் சண்டை வர காரணமாக இருந்து வந்தது.

காமாட்சி
இதே தகராறில் 6 மாசத்திற்கு முன்புகூட கணவன், குழந்தைகளை விட்டு விட்டு, ஆவடியில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார் காமாட்சி. இந்த 6 மாதத்தில் டைவர்ஸ் சம்பந்தமாக இருவருமே முயற்சி செய்து வருகிறார்கள்.. ஹைகோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது.

தகராறு
கடந்த 2 நாள்களுக்கு முன்பு காமாட்சி, குழந்தைகளை பார்க்க கணவன் வீட்டுக்கு வந்தார். வந்த உடனேயே இருவருக்கும் திரும்பவும் சண்டை ஆரம்பித்துவிட்டது. "இனிமேல் குழந்தைங்களை பார்க்ககூட இங்க வரக்கூடாது" என்று ராஜன் காமாட்சியிடம் சொல்லவும், தகராறு உச்சத்துக்கு போய்விட்டது.

தப்பி ஓட்டம்
இதில் ஆத்திரம் அடைந்த ராஜன், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து.. உடைத்து.. காமாட்சியின் கழுத்து, வயிறு, தொடை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்த ஆரம்பித்தார். காமாட்சிக்கு உடம்பெல்லாம் ரத்தம் வழிந்து ஊற்றியதை கண்டதும் ராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சிகிச்சை
அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காமாட்சியை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியிலும் பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இப்போது காமாட்சிக்கு தீவிரமாக சிகிச்சை நடந்து வருகிறது. ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications