62 வயசு சுலக்‌ஷனா மீது 75 வயசு தாத்தாவுக்கு சந்தேகம்.. புது அரிவாளை வாங்கி.. ஒரு கொலை.. ஒரு தற்கொலை

சென்னையில், மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்டார் கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 62 வயசு சுலக்‌ஷனா மீது 75 வயசு தாத்தாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.. அதனால் கடைக்கு போய் புது அரிவாள் ஒன்றை வாங்கி வந்து, மனைவி தூங்கும்போது வெட்டி கொன்றார்.. பிறகு மொட்டை மாடிக்கு சென்று தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. சென்னையில் இந்த பயங்கரம் நடந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதம்.. 75 வயதாகிறது.. இவரது மனைவி சுலக்‌ஷனா.. 62 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

 husband killed wife and commits suicide near chennai

மகன் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.. ஒரு மகள் ஆந்திராவிலும், இன்னொரு மகள் சென்னை போரூரிலும், மற்றொரு மகள் புது பெருங்களத்தூர் பகுதியிலும் வசித்து வந்துள்ளனர்.

ஜெகன்நாதம், ஜெனரேட்டர் ரிப்பேர் செய்யும் வேலை செய்து வந்தார்... இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.. அதனால், ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. ஆனால், இவருக்கு சுலக்‌ஷனாவின் நடத்தையில் சந்தேகம் இருந்திருக்கிறது.. அது தொடர்பாக அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

இதனால், மனைவியை கொன்றே விடுவது என்று முடிவு செய்தார். அதற்காக கடைக்கு போய் புது அரிவாள் வாங்கி வந்தார்.. அதனை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்தார்.நேரம் பார்த்து சுலக்‌ஷனாவை கொல்ல வேண்டும் என காத்திருந்தார்.. அதன்படி, சுலக்‌ஷனா நன்றாக தூங்கும்போது, அந்த அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இதை பார்த்ததும் வேக வேகமாக தன் வீட்டின் மாடிக்கு சென்று கேபிள் ஒயரில் தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இவர்கள் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வந்ததால், அங்கு குடியிருப்பவர்களில் ஒருவர், மொட்டை மாடியில் பிணம் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த தகவலை சொல்ல வீட்டுக்குள் ஓடிவந்தார்.

ஆனால் வீட்டில் சுலக்‌ஷனாவின் சடலத்தை பார்த்ததும் அலறி அடித்து கொண்டே வெளியே ஓடிவந்தார். அதன்பிறகு அந்த பகுதி மக்கள் பீர்க்கன்காரணை போலீசாருக்கு விஷயத்தை சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து, தம்பதி சடலங்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+