உறவினருடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர் ஆத்திரம்.. ஓட ஓட விரட்டி கள்ளக்காதலன் கொலை
சென்னை: திண்டிவனத்தில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த சென்னை இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (27). இவர்களுக்கு கிரி (11), தமிழ்ச்செல்வி (9) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
திண்டிவனம் கோட்டைமேட்டில் அகுல்குளம் அருகே வாடகை வீட்டில் ரகுவரன் வசித்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் சரிவர வேலைக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குழந்தைகள்
இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சென்னை வந்தார் மகாலட்சுமி. திருவொற்றியூரில் உள்ள உறவினர் ராஜூவின் மகள் பத்மப்ரியா வீட்டில் தங்கிய மகாலட்சுமி துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது ராஜூவின் மூத்த மகன் விக்னேஷுடன் (25) மகாலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஊரடங்கு
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் ஊரடங்கால் கடைகள் மூடப்பட்ட நிலையில் மகாலட்சுமி குழந்தைகளுடன் திண்டிவனத்திற்கு சென்று கணவருடன் வசித்து வந்தார். அங்கிருந்தும் செல்போனில் விக்னேஷுடன் பேசியது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போனில் பேசிய போது மகாலட்சுமியை பார்க்க வேண்டும் என விக்னேஷ் கூற, அதற்கு அவரோ கணவர் இல்லாத நேரத்தில் இங்கு வருமாறு அழைத்துள்ளார்.

மகாலட்சுமி
இதையடுத்து விக்னேஷ் திண்டிவனத்திற்கு வந்துள்ளார். அங்கு ரகுவரன் வீட்டில் இருந்ததால் சிறிதுநேரம் காத்திருந்து வரும் படி செல்போனில் மகாலட்சுமி கூறியுள்ளார். கணவர் வெளியே சென்றதும் குழந்தைகளை விளையாட செல்ல அனுப்பி வைத்துவிட்டார். அப்போது விக்னேஷும் மகாலட்சுமியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதிர்ச்சி
சில நிமிடங்களில் வெளியே சென்ற கணவன் வீடு திரும்பினார். அப்போது இவர்களது கோலத்தை கண்டு அதிர்ந்தார். வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகாலட்சுமியை குத்த முயன்றார். இதை விக்னேஷ் தடுத்த போது அவரை குத்தினார். அலறியடித்தபடி வெளியே ஓடிய விக்னேஷை ஓட ஓட விரட்டி சென்று குத்தியதில் அவர் அங்கேயே இறந்தார். இதையடுத்து முண்டியம்பாக்கம் போலீஸார் ரகுவரனை கைது செய்தனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications