கப்பலேறிய மனைவியின் மானம்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவர்.. அவமானத்தில் நெளியும் போலீஸ் அதிகாரி
சென்னை: காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு சமீபத்தில் டிரான்ஸ்பர் ஆகி வந்தார் ஒரு உயர் அதிகாரி.. இப்போது ஏகப்பட்ட அவமானத்தில் கூனி குறுகி போயிருக்கிறார்.. போலீஸ் விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, துறை ரீதியான நடவடிக்கை என்னாகுமோ? என்ற கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளார்.. புதுச்சேரி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. என்ன நடந்தது புதுச்சேரியில்?
காரைக்கால் பகுதியில் பணியாற்றிய காலத்தில், எஸ்.பி அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் அதிகாரிக்கும், அங்கு பணியாற்றிய பெண் போலீசுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெண் போலீஸ் ஏற்கனவே திருமணமானவர்..

பெண் போலீஸ் - ஆண் போலீஸ்
பணி நிமித்தமாக ஆரம்பித்த இவர்களின் இந்த பழக்கம், நாளடைவில் எல்லை மீறி சென்றது.. தகாத உறவிலும் முடிந்தது..
அந்த உயர் அதிகாரி 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டார்.. ஆனாலும் அவர்களுக்கிடையிலான கள்ளக்காதல் துண்டிக்கப்படவில்லை.. நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், செல்போன், வாட்ஸ்அப், வீடியோ கால் மூலம் அந்த உறவு தொடர்ந்து வந்துள்ளது.
காவல்துறையில் கள்ளக்காதல் ஜோடி
கள்ளக்காதலன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதால், இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது போனும் கையுமாகவே காணப்பட்டார் பெண் போலீஸ்.. செல்போனை எப்போதும் கையில் வைத்திருப்பதும், அடிக்கடி பேசுவதும் கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவரும் போலீஸ் துறையை சேர்ந்தவர் என்பதால், சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியின் செல்போன் கால் பதிவுகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்ச்சியாக பேசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கணவர், மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளார். செல்போனில் கண்ட காட்சிகள், அவரை நிறையவே நிலைகுலைய வைத்துவிட்டது..
மனைவியின் வீடியோ
உடனடியாக, காரைக்கால் சீனியர் எஸ்பி லட்சுமி சவுஜன்யாவை சந்தித்து, தன்னிடம் இருந்த ஆதாரங்களை காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.. தன்னுடைய கணவர், தன்னுடைய செல்போனை ஆராய்ந்து, இப்படியொரு நடவடிக்கையை எடுப்பார் என்று மனைவி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
இந்த விவகாரம் வெளியே வந்ததையடுத்து, பெண் காவலர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானர்.. கணவருக்கு எல்லாம் தெரியவந்துவிட்டதே என்ற பயமும், அவமான உணர்வும் அவரை மனதளவில் நொறுக்கியது..
கப்பலேறிய மனைவி மானம்
இதன் விளைவாக, 2 நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.. எனினும் அப்பெண் போலீஸ் உடனடியாக மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்..
மற்றொருபக்கம் கணவர் தந்த புகார் மீது, புதுச்சேரிக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்த அந்த உயர் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.. விசாரணை ஆரம்பமாகிவிட்டதால், அந்த அதிகாரி இப்போதும் கடும் மனஅழுத்தத்தில் இருக்கிறாராம்.. இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருக்கிறாராம். இந்த சம்பவம்தான், புதுச்சேரி காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவமானத்தில் போலீஸ் ஆபீஸர்
இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடப்பதால், விசாரணையின் முடிவில்தான் உண்மை முழுமையாக வெளிவரும்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பும் தெரிகிறது.
எத்தனையோ அதிகாரிகள் நேர்மையாக இருக்கும்போது, ஒருசில அதிகாரிகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒழுக்கம், பொறுப்பு ஆகியவற்றை கடைபிடிக்க மறந்துவிடுவது காவல்துறையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications