எடைப்போட்டு பார்த்து கொடுத்த வெற்றி.. எடப்பாடிக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள்.. மு.க.ஸ்டாலின்!

நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சிற்கு மக்கள் நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன் என்றும், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்று முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார். இதன்படி 7ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

மு.க.ஸ்டாலின் பேட்டி

மு.க.ஸ்டாலின் பேட்டி

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வரலாற்றில் பதிவாக கூடிய வகையில் மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த வாக்காளர்கள் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம்

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம்

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். இப்போது மக்கள் திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்புடன் நடத்த மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை மறந்து நாலாந்தரமாக பேச்சாளர் போல் பேசிய பேச்சிற்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கி இருக்கிறார்கள். 20 மாத திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி.

மு.க.ஸ்டாலின் நன்றி

மு.க.ஸ்டாலின் நன்றி

விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. அந்த தொகுதி மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக அயராது உழைத்த திமுக தொண்டர்கள், எம்பி-க்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தேசிய அரசியல்

தேசிய அரசியல்

தொடர்ந்து, தேசிய அரசியலுக்கு மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள் பேசியது பற்றிய கேள்விக்கு, நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமுமில்லை. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது , யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பது தான் எங்களின் கொள்கை என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+