நான் ஒரு சனாதனி.. யாரையும் ஒதுக்க மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபர பேச்சு!
சென்னை: சனாதன தர்மம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் ஒரு சனாதனவாதி எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதன் மூலம் தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவர் அவமதிக்கிறார் என்றும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவியும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து திமுகவின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் சொல்லும் 'திராவிட மாடல்' ஆட்சி என்பதனையும் விமர்சித்து வருகிறார் ஆளுநர். திமுகவினர் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் 'சனாதனம்' தொடர்பாக தொடர்ந்து உயர்வாகப் பேசி வருகிறார் ஆளுநர். நேற்று கூட கடலூர் மாவட்டம் ஆதனூரில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் 100 பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவருவுச்சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார் ஆளுநர் ரவி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், "என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது, சனாதனத்தின் வெளிப்பாடு." எனத் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம், மனித குலத்துக்கே விரோதமானது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் கூட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். இப்படியான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி தன்னை ஒரு சனாதனவாதி என வெளிப்படுத்தியுள்ளது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications