‛பாஜகவுக்கு இனி தேர்தல் பிரசாரம் இல்லை’.. ஜேபி நட்டாவுக்கு நடிகை குஷ்பு பரபர கடிதம்.. காரணம் இதுதான்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்காக இனி பிரசாரம் செய்யமாட்டேன் என்று பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார்.
நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் குஷ்பு. தற்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். பாஜகவின் தேசிய செயற்குழு கமிட்டி உறுப்பினராக உள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் தான் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி கொள்வதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன். 2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வாலெலும்பு (tailbone-முதுகின் கீழ்பகுதியில் உள்ள எலும்பு) முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன்.
இத்தகைய சூழலில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு கண்டிப்புடன் அறிவுறுத்தியது. பிரசாரம் செய்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பாஜகவின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில் டாக்டர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.
பலகட்ட ஆலோசனைகளை பெற்றேன். அப்போது பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இந்த நடவடிக்கை என்பது ஒரு பெரிய அல்லது உயிருக்கு ஆபத்தான செயல்முறை அல்ல. இருப்பினும் கூட தாமதம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. ஏனென்றால் தாமதம் செய்வது எனது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சனையாக மாறலாம். மேலும் தற்போதைய வழக்கமான செயல்முறைகளை நான் குறைத்து கொண்டேன்.
பிரசாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டாக இருக்கும். இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அதேவளையில் முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது.
இருப்பினும் எனது வலைதள பக்கங்கள் மூலம் பாஜகவின் கொள்கை, செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதன் மூலம் தொடர்ந்து பிரசாரத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பேன். உங்களின் ஊக்கம் வலுவாக நான் திரும்பி வருவதற்கான முயற்சிக்கு வலு சேர்க்கிறது. நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் குஷ்பு பாஜகவுக்காக பிரசாரம் செய்யமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications