அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.. மக்களைக் காப்போம்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது.
சென்னை நகர் பகுதிகள், புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அனைத்து வித போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் சேவை
வெள்ளத்தில் சிக்கியவர்களை போலீசார், தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இந்த மழை காலத்தில் காவல்துறையினர், மின்வாரிய துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் 24 மணி நேரமும் கடமை தவறாமல் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
போக்குவரத்துக் கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி நிரந்தரம்... அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!.

24 மணி நேரமும் சேவை
வெள்ளத்தில் சிக்கியவர்களை போலீசார், தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இந்த மழை காலத்தில் காவல்துறையினர், மின்வாரிய துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் 24 மணி நேரமும் கடமை தவறாமல் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தலைவணங்குகிறேன்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

தலைவணங்குகிறேன்
தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்! உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி
மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவினார். இந்த செய்தியை டுவிட்டரில் ஒருவர் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த பதிவையும் இணைத்து இருந்தார்.

முதல்வர் பகிர்ந்த புகைப்படம்
இதேபோல் ''காலைல கொடுத்த புகாருக்கு 2 மணி நேரத்தில் மின் கம்பம் ஏறி வேலை செய்யும் மின்பணியாளர்கள் Folded hands அடை மழைலாம் அவங்க பொருட்படுத்தவே இல்ல'' என்று மின்வாரிய பணியாளர் ஒருவர் வேலை செய்யும் புகைப்படத்தை போட்ட நெட்டிசன் ஒருவரின் பதிவையும் முதல்வர் ஸ்டாலின் பகிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications