மருத்துவர்கள் வற்புறுத்தினாலும்.. மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், திமுகவினர் ஓய்வின்றி களமாடிக்கொண்டிருக்கும்போது எனக்கு ஓய்வெடுக்க மனமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை மண்டல பொறுப்பாளர்கள் பர்கிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!

உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications