'அப்படி' சொல்லுற அளவுக்கு அண்ணாமலை குழந்தை இல்லை.. திடீரென சப்போர்ட்டாக பேசிய சீமான்!
சென்னை: அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது என்றும், நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தையும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போவது அவர் கூறியதாவது:- நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தையும் இல்லை பயித்தியக்காரனும் இல்லை. நம்ம கேள்வி பட்டது வரைக்கும்.. 2,3 விஷயம் சொல்கிறார்கள். அண்ணா பற்றி குறை சொன்னது.. 20 இடம் கேட்டதாக சொல்கிறார்.. அதற்கு இவர்களுக்கு (அதிமுக) உடன் பாடு இல்லை.

பிறகு சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இவர்களை எல்லாம் இணைத்து வலிமையாக்குங்கள் என்று பாஜக கருத்து சொன்னதாகவும் அதற்கு அதிமுக உடன்படவில்லை என்றும் விவாதங்களை பார்க்க முடிகிறது. அதில அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது. அது நம்பும்படியாக இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி நான் தான்..
நான் மக்களோடு சேர்ந்து கூட்டணி வைக்க போகிறேன். நான் முழுமையாக மக்களை நேசிக்கிறேன்.. நம்புகிறேன். இது இரண்டும் தான் ஒரு தலைவனுக்கான அடிப்படை தகுதி என நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நான் வேலை செய்கிறேன். அதனால் நான் தனித்து தான் நிற்பேன். என் மக்களை நேசிக்காதவன் நம்பாதவனுக்கு தான் படை தேவை. நான் என்னுடைய வீரத்தை என்னுடைய பலத்தை நம்பிதான் போர்க்களத்திற்கு போகிறேனே தவிர...
என்னோடு இவர் வருகிறார்.. இவர் 10 பேர் அடிப்பாரா... இவர் 5 பேரை அடிப்பரா... இதெல்லாம் கழுதைப்புலி, செந்நாய்க்கு சரி... புலிக்கு சரியில்லை. வேட்டைக்கு போகும் போது எல்லாரையும் கூட்டிட்டு வரும்.. ஆனால், புலி ஒற்றை ஆளாகத்தான் வரும். என்னையை நேசிக்கிற ஒரு கூட்டம் வருதா... திராவிட கட்சிகளோடு இந்திய கட்சிகளோடு உடன்பாடு இல்லை.. அண்ணன் சொல்வது சரியாகத்தான் இருக்கு... அவருடன் போகலாம் என்று வந்தால் யோசிக்கலாம்.
இந்த தேர்தலிலும் தனித்து தான் போட்டி... 2026லும் தனித்துதான் போட்டி.. காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயாக முறையில் போராட்டம் இருக்கும். அவர்களை போல அடித்து பேருந்தை மறித்து சண்டை போடுவது இருக்காது. கடந்த முறை கர்நாடாகவில் இருந்து வந்த பேருந்தை என் தம்பி கடல் தீபன் நிறுத்தி விட்டார். அதற்கு 90 நாள் குண்டாசில் போட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு அடிக்கிறார்கள்... ஆனால், ஒரு எப்.ஐ.ஆர் கூட கிடையாது. இவ்வாறு சீமான் கூறினார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications