என் ஒப்பந்தத்திற்கு தவம் கிடந்தார்கள்.. அல் நஸர் உடன் இணைய இதுதான் காரணம்.. ரொனால்டோ ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின், தன்னை ஏராளமான அணிகள் ஒப்பந்தம் செய்ய முன் வந்ததாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இருப்பினும், அல் நஸர் அணி நிர்வாகிகளுக்கு தான் வாக்கு கொடுத்ததால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், ஐரோப்பாவில் தன் வேலை முடிவுக்கு வந்ததாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்தும், உரிமையாளர்கள் குறித்தும் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் முடித்துக் கொண்டது.

இதனிடையே பியர்ஸ் மோர்கன் உடனான நேர்காணலின் போது, மான்செஸ்டர் யுனைடெட் அணி இல்லையென்றாலும், ஐரோப்பா கால்பந்து லீக்கை விடுத்து வேறு எந்த கால்பந்து லீக்கிலும் விளையாடப் போவதில்லை. அமெரிக்கா, சவுதி அரேபியா லீக் தொடரில் விளையாட மாட்டேன் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ

அல் நஸர் அணி ஒப்பந்தன்

அல் நஸர் அணி ஒப்பந்தன்

இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆணவத்துடன் செயல்படுவதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். கால்பந்து விளையாட்டில் ரொனால்டோவின் சரிவு தொடங்கிவிட்டதாகவும் கால்பந்து பத்திரிகைகள் விமர்சித்தன. இதனிடையே சவுதி அரேபியாவின் அல் நஸர்(Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்திய மதிப்பில் ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்தது.

ஆசியாவில் முதல்முறை

ஆசியாவில் முதல்முறை

இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அல் நஸர் அணியின் ஜெர்சி அணிந்து ரசிகர்கள் முன் ரொனால்டோ, தோன்ற சவுதி அரேபியா ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர். ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட லீக் போட்டிகளில் ரொனால்டோ கால்பந்து விளையாடி இருந்தாலும், ஆசியாவைச் சேர்ந்த அணிக்காக ரொனால்டோ முதல்முறையாக விளையாட உள்ளார்.

ரொனால்டோ பேட்டி

ரொனால்டோ பேட்டி

அல் நஸர் அணிக்காக விளையாட உள்ள ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின், என்னை ஒப்பந்தம் செய்ய பலரும் அணுகினார்கள். ஐரோப்பாவில் பல அணிகள் தொடர்பு கொண்டன. பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஏன் போர்ச்சுகலில் இருந்து கூட எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் அல் நஸர் அணிக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன்.

மீண்டும் ரசிகர்கள் விவாதம்

மீண்டும் ரசிகர்கள் விவாதம்

அல் நஸர் அணி நிர்வாகிகள் கால்பந்து விளையாட்டை மட்டும் முன்னேற்ற விரும்பவில்லை. அவர்களின் நாட்டையும் சேர்த்து முன்னேற்ற விரும்புகின்றனர். ஐரோப்பாவில் எனது பங்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆசியாவில் புதிய சவாலை ஏற்றுள்ளேன். எனக்கு எது தேவை என்பதோடு, எது தேவையில்லை என்பது நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார். ரொனால்டோவின் கருத்துக்கள் ரசிகர்களிடையே மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த எந்த அணியும் ரொனால்டோவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை என்றும், ரொனால்டோ தனது ஆட்டத்திறன் குறைந்து வருவதை ஏற்க மறுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அல் நஸர் அணியுடன் ஒப்பந்தம் செய்ததற்கான காரணத்தை வெளிப்படையாக கூறாமல், மற்ற அணிகள் மீது சேற்றைவாரி இரைப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+