Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் உரைக்கு பதிலடி.. கருணாநிதியின் மகன் என்பதை மெய்ப்பித்துள்ளேன்.. சட்டசபையில் ஸ்டாலின் ஆவேச உரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி வீரத்துடன், விவேகத்துடன் நடக்கிறது என்பதை இப்போது இந்திய துணைக் கண்டம் உணர்ந்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறார். ஆட்சியின் மாண்பை காக்க நான் என் சக்தி மீறி செயல்படுவேன் என்பதை எல்லோரும் அறிவார்கள், நான் கருணாநிதியின் மகன் என்பதை மெய்ப்பித்து காட்டும் நாளாக சட்டசபையின் முதல் நாள் அமைந்து என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 9ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிறைவு பெறுகிறது. கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

தீர்மானம்

தீர்மானம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மறுநாள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திலும் திமுக ஆளுநர் உரை மீதான வருத்தத்தை பதிவு செய்தது. திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் ஆளுநர் உரைக்கு வருத்தமும் நன்றியும் தெரிவித்து தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுநர் சுயமான பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக தீர்மானத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆளுநர் உரை மீதான விவாத கேள்விகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தினார்.

பதில் உரை

பதில் உரை

இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி வீரத்துடன், விவேகத்துடன் நடக்கிறது என்பதை இப்போது உணர்ந்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறார். சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கவனிக்கும் அரசு இது. அனைவரும் சமம் என்ற கொள்கையை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி இது. திராவிட ஆட்சி வீரத்துடன், விவேகத்துடன் நடக்கிறது என்பதை இந்தியாவே இப்போது உணர்ந்துவிட்டது.

திராவிட மாடல்

திராவிட மாடல்

பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி இவர்களின் கொள்கை கொண்ட ஆட்சி இது. இதுவே திராவிட மாடல் ஆட்சி. 20 மாதங்களில் நாம் கடந்த காலம் குறைவு, ஆனால் செய்த பணிகள் அதிகம். பல சாதனைகளை செய்து இருக்கிறோம். சமத்துவம், சுயமரியாதை, பெண் உரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் மேன்மைக்காக கடந்த 20 மாதங்களில் கடுமையாக உழைத்து இருக்கிறோம். இதையே கருத்தில் கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறோம்.

ஆட்சி

ஆட்சி

திராவிட மாடல் ஆட்சியானது செயல்பட்டு வருகிறது என்பதை விட வெற்றிபெற்று வருகிறது என்பதுதான் சரியாக இருக்கும். எல்லோரும் எல்லாம் என்ற வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாடு வளர்ச்சி அமைய வேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி எல்லோரும் இருக்க வேண்டும், எல்லோரும் சமமாக வளர வேண்டும் என்று திட்டமிட்டோம். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் கண்ட கனவு. அவர்களின் கொள்கையின் கீழ் நாம் செய்யும் ஆட்சி என்பது ஏறுமுகத்தில் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் தொடக்க உரையை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள், எதிர்கால திட்டங்கள் பற்றி அவர் பேசினார். அன்று நடந்ததை பற்றி பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதே சமயம் மக்கள் எங்களுக்கு வழங்கிய உரிமைகளை காக்க அன்று நான் அவையில் பேசினேன். ஆட்சியின் மாண்பை காக்க நான் என் சக்தி மீறி செயல்படுவேன் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆயிரம் கைகள் மறைத்து இருந்தாலும் ஆதவன் மறைவது இல்லை.

சக்தி

சக்தி

தமிழ் காக்க, தமிழ் மண் காக்க, தமிழர் நலன் காக்க , தமிழர் மானம் காக்க என்றும் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான். மக்களின் மானத்தை காக்க என்றும் உழைக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்ப்பித்து காட்டும் நாளாக அன்றைய தினம் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இந்த மாமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றிய ஆளுநர் ஆர். என் ரவிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்., என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+